Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

13-வது தேசிய இளைஞர் விழா செ‌ன்னை‌யி‌ல் நட‌க்‌கிறது!

13-வது தேசிய இளைஞர் விழா செ‌ன்னை‌யி‌ல் நட‌க்‌கிறது!
, சனி, 12 ஜனவரி 2008 (11:31 IST)
பெருமை‌க்கு‌ரிய 13-வது தேசிய இளைஞர் விழாவை செ‌ன்னநேரு உள்விளையாட்டு அரங்கிலஇ‌ன்றதுவ‌ங்கு‌கிறது.

சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினத்தை (ஜன.12) நினைவுக் கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய இளைஞர் விழா ஏதேனும் ஒரு மாநிலத்தில் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு இளைஞர் விழாவை மத்திய அரசு தமிழக அரசுடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது.

இந்த ஆண்டு 13-வது தேசிய வார விழாவை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இ‌ன்றதமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி துவக்கி வை‌க்‌கிறா‌ர். இ‌வ்‌விழா‌வி‌லசிறப்பு விருந்தினராக மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் மணிசங்கர் அய்யர் கலந்து கொ‌‌ள்‌கிறா‌‌ர்.

12.01.2008 முதல் 16.01.2008 வரை சென்னையில் உள்ள பல்வேறு அரங்குகளில் பல்வேறு போட்டிகளும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன.

16.01.2008 அன்று நிறைவு நாள் நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 2006-07-ம் ஆண்டுக்கான தேசிய இளைஞர் விருதுகளை வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியில் மத்திய இளைஞர் நலன் விளையாட்டுத் துறை அமைச்சர் மணிசங்கர் அய்யர், மத்திய இளைஞர் நலன், விளையாட்டுத் துறைச் செயலர் எஸ்.ே.அரோரா ஆ‌கியோ‌ரகலந்து கொள்கின்றனர்.

இந்த விழாவில் இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும் சுமார் 4000 கலைஞர்கள் அந்தந்த மாநிலங்களின் கலாசாரங்களைப் பிரதிபலிக்கும் நடன நாட்டிய நிகழ்ச்சிகளை நிகழ்த்த உள்ளனர். இந்த கலை நிகழ்ச்சிகளைக் பொது மக்கள் இலவசமாகக் கண்டு களிக்கலாம்.

இளைஞர் விழாவில் நடைபெற உள்ள போட்டிகள், போட்டி அல்லாத நிகழ்ச்சிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் பற்றிய விவரம் வருமாறு :

போட்டிகள் நடைபெறும் இடங்கள்

வ.எண் இடம் போட்டி நாள்

1 SDAT ஜவஹர்லால் நேரு
உள்விளையாட்டு அரங்கம் நாட்டுப்புற நாட்டியம் 13.01.08, 14.01.07, 15.01.08

2 அருங்காட்சியகம் எழும்பூர் நாட்டுப்புற பாடல்கள் 15.01.08

3 MCCபள்ளி அரங்கம் சேத்துப்பட்டு ஓரங்க நாடகம் 13.01.08, 14.01.07, 15.01.08

4 B.Ed.கல்லூரி மெரினா பேச்சு 13.01.08

5 B.Ed.கல்லூரி மெரினா கர்நாடகப் பாட்டு 14.01.08

6 B.Ed.கல்லூரி மெரினா இந்துஸ்தானி பாட்டு 15.01.08

7 WUSஅரங்கம் எழும்பூர் செவ்வியல் இசைக்
கருவிகள் 13.01.08, 14.01.07, 15.01.08

8 விவேகானந்தர் அரங்கம் அண்ணா
பல்கலைக் கழகம் செவ்வியல் நடனம் 13.01.08, 14.01.07, 15.01.08

கலை நிகழ்ச்சிகள்:

வ.எண் இடம் நிகழ்ச்சி நாள்

1 மாதிரி பள்ளி வளாகம் மெரினா கலை நிகழ்ச்சிகள்,
கண்காட்சி, யுவ க்ருத்தி,
உணவு விழா, சாகச நிகழ்ச்சி 13.01.08, 14.01.07, 15.01.08

2 தொழிற் கண்காட்சி தீவுத் திடல் கலை நிகழ்ச்சிகள் 13.01.08, 14.01.07, 15.01.08

3 பேராசிரியர் கே எஸ் ஹெக்டே
அரங்கம் அண்ணா பல்கலைக் கழகம் விடலையர் வினைகள் 13.01.08, 14.01.07, 15.01.08

4 கால்நடைக் கல்லூரி அரங்கம் வேப்பேரி சுவிசார் கருத்தரங்கம்
இளைஞர் மாநாடு 13.01.08, 14.01.07, 15.01.08

5 SDATஜவஹர்லால் நேரு
உள்விளையாட்டு அரங்கம் கலை நிகழ்ச்சிகள் 13.01.08, 14.01.07, 15.01.08

6 SDAT ஜவஹர்லால் நேரு
உள்விளையாட்டு அரங்கம் (மீடியா ஹால்) இளைஞர் செயல்பாடு
ஆவணங்கள் தயாரிப்பு 13.01.08, 14.01.07, 15.01.08

7 SDAT ஜவஹர்லால் நேரு
உள்விளையாட்டு அரங்கம் மாயாஜாலாம் (மாஜிக் ஷோ) 15.01.08

8 SDAT ஜவஹர்லால் நேரு
உள்விளையாட்டு அரங்கம் நிறைவு விழா 16.01.08 மாலை 4 மணி


அனைத்துப் போட்டிகளும் நிகழ்ச்சிகளும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.

தேசிய இளைஞர் விருது: ஆண்டுதோறும் தேசிய இளைஞர் விருதுகள் வழங்கப்படுகிறது. பல துறைகளில் சிறந்த மேம்பாட்டு நடவடிக்கை மற்றும் சமூக சேவை புரிந்த இளைஞர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இளைஞர்களுக்கான விருதில் ஒரு பதக்கமும், சான்றிதழ் மற்றும் ரொக்கப்பணம் ரூ.20 ஆயிரமும் வழங்கப்படும்.

தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் விருதில் ஒரு கோப்பையும், பாராட்டுச் சான்றிதழும், ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசும் வழங்கப்படும்.

2006-07-ம் ஆண்டில் தமிழ்நாட்டை சேர்ந்த 4 பேருக்கு இளைஞர் விருதுகள் வழங்கப்படவுள்ளன. அஞ்சலி சந்திரசேகர், பி சிவகுமார், வி ரமேஷ், கே ஜெயக்கண்ணன் ஆகியோருக்கு இளைஞர் விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் ஆளுநர் திரு பர்னாலா விருதுகள் வழங்கி கௌரவிக்க உள்ளார்.

இந்த 13-வது தேசிய இளைஞர் விழாவின் அடையாள சின்னம் (லோகோ) மற்றும் உருவ பொம்மைகளை நாடாளுமன்ற உறுப்பினர் கவிஞர் கனிமொழி கடந்த 5-ம் தேதி வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil