Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சத்தி வனப்பகுதியில் யானையை கொன்று தந்தம் திருட்டு

ஈரோடு செ‌ய்‌தியாள‌ர்

Advertiesment
சத்தி வனப்பகுதியில் யானையை கொன்று தந்தம் திருட்டு
, வெள்ளி, 11 ஜனவரி 2008 (10:16 IST)
சத்தியமங்கலம் அடுத்துள்ள காளிதிம்பம் வனப்பகுதியில் தந்தத்தை எடுத்த நிலையில் ஆண்யானை ஒ‌ன்று இற‌ந்து ‌கிட‌ந்தது.

சத்தியமங்கலம் அடுத்து திம்பம் வனப்பகுதியில் ஆண் யானையை கொன்று தந்தம் திருடிய கும்பலுக்கு வனத்துறையினர் வலைவிரித்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ளது திம்பம் மலைப்பகுதி. இங்கிருந்து தலமலை செல்லும் வழியில் உள்ளது காளிதிம்பம். இது பவானிசாகர் வனசரகத்திற்கு உட்பட்ட பகுதியாகும். காளிதிம்பத்திற்கு வடக்கு 2 கி.மீ., தொலைவில் ஆண்யானை ஒன்றை கொள்ளையர்கள் துப்பாக்கியில் சுட்டுக்கொன்று தந்தத்தை திருடி சென்றுள்ளனர்.

சம்பவம் ப‌ற்‌றி தெரிந்தவுடன் சத்தியமங்கலம் மாவட்ட வன அதிகாரி ராமசுப்பிரமணியம், பவானிசாகர் ரேஞ்சர் மோகன், வனரோந்து படை ரேஞ்சர் சிவமல்லு உள்ளிட்டோர் சென்று பார்வையிட்டனர். சுமார் மூன்று நாளுக்கு முன் இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என வனத்துறையினர் சந்தேகிக்ககின்றனர்.

தற்போது தெங்குமரஹடா அருகே உள்ள கூலித்துறைப்பட்டியில் வனப்பகுதியில் ரோந்து சுற்றும் பணியாளர்களுக்கு அதிரடிப்படையினர் விஷேச பயிற்சி அளித்து வருகின்றனர். இந்த சமயத்தை பயன்படுத்தி யானை தந்தம் திருடும் கும்பல் தங்கள் கைவரிசையை காட்டியுள்ளது குறிப்பிடதக்கது.

இன்று பிரேத பரிசோதனை நடக்கவுள்ளது. இதன் பின்னர்தான் துப்பாக்கி குண்டு பாய்ந்த இடம் மற்றும் எத்தனை துப்பாக்கி குண்டுகள் பாய்ந்துள்ளது என்பது தெரியவரும்.

வனத்துறையினர் வனக்கொள்ளையர்கள் மற்றும் யானையை கொன்று தந்தம் திருடும் கும்பலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுத்தும் இந்த சம்பவம் நடந்துள்ளது வனத்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil