பிளஸ்2, 10ஆம் வகுப்பு ஆண்டு இறுதி தேர்வுக்கான கால அட்டவணை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிளஸ்-2 தேர்வு மார்ச் 3-ந்தேதியும், மெட்ரிகுலேசன் தேர்வுகள் 25ஆம் தேதியும், 10ஆம் வகுப்பு தேர்வு மார்ச் 27ஆம் தேதியும் துவங்குகிறது.
தமிழ்நாட்டில் பிளஸ்2 தேர்வை 6 லட்சத்து 60 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள். இதற்காக 1,650 தேர்வு மையங்கள் அமைக்கப்படுகின்றன. 10ஆம் வகுப்பு தேர்வை 9 லட்சத்து 10 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுத உள்ளனர். இதற்காக 2,700 தேர்வு மையங்கள் அமைக்கப்படுகின்றன.
மெட்ரிகுலேஷன் 10ஆம் வகுப்பு தேர்வை ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேர் எழுதுகிறார்கள். இதற்காக 1,420 தேர்வு மையங்கள் அமைக்கப்படுகின்றன. ஓ.எஸ்.எல்.சி. தேர்வை 350 மாணவர்கள் எழுதுகிறார்கள். ஆகமொத்தம் 17 லட்சம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள்.
இதற்கான அதிகாரபூர்வமான தேர்வு கால அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. அரசு தேர்வு இயக்குனர் வசந்தி ஜீவானந்தம் தேர்வு கால அட்டவணையை வெளியிட்டார்.
பிளஸ்-2 தேர்வு கால அட்டவணை:
மார்ச் 3ஆம் தேதி - தமிழ் முதல் தாள்
4ஆம் தேதி - தமிழ் 2-வது தாள்
5ஆம் தேதி - மனநல இயல், சுருக்கெழுத்து
6ஆம் தேதி - ஆங்கிலம் முதல் தாள்
7ஆம் தேதி - ஆங்கிலம் 2-வது தாள்
8ஆம் தேதி - தட்டச்சு தமிழ், ஆங்கிலம்
10ஆம் தேதி - இயற்பியல், வணிகவியல்
11ஆம் தேதி - புவியியல்
12ஆம் தேதி - வர்த்தக கணிதம்
13ஆம் தேதி - வேதியியல்
14ஆம் தேதி - கணக்கு பதிவியல்
15ஆம் தேதி - மனைஅறிவியல், மைக்ரோபயாலஜி, பயோகெமிஸ்டரி, நர்சிங், நிïட்ரிஷன் மற்றும் டயட்டீக்ஸ்
17ஆம் தேதி - கணிதம், விலங்கியல்
18ஆம் தேதி - பொருளாதாரம், சித்த மருத்துவம்
19ஆம் தேதி - அனைத்து தொழில் பாடங்களுக்கான தேர்வுகள்
20ஆம் தேதி - உயிரியல், தாவரவியல், வரலாறு
22ஆம் தேதி - அரசியல் அறிவியல், அடிப்படை அறிவியல், இந்திய கலாசாரம்
24ஆம் தேதி - கம்ப்ïட்டர் சயின்ஸ், சிறப்பு தமிழ், கம்ïனிகேட்டிவ் இங்கிலீஷ், புள்ளியியல்
10ஆம் வகுப்பு தேர்வு
மார்ச் 27ஆம் தேதி - தமிழ் முதல் தாள்
28ஆம் தேதி - தமிழ் 2-வது தாள்
31ஆம் தேதி - ஆங்கிலம் முதல் தாள்
ஏப்ரல் 1ஆம் தேதி - ஆங்கிலம் 2-வது தாள்
4ஆம் தேதி - கணிதம்
8ஆம் தேதி - அறிவியல்
10ஆம் தேதி - சமூக அறிவியல்
ஓ.எஸ்.எல்.சி. தேர்வு
மார்ச் 25ஆம் தேதி - அரபி, சமஸ்கிருதம் மொழி தாள்-1
27ஆம் தேதி - தமிழ்
29ஆம் தேதி - அரபி, சமஸ்கிருதம் மொழி தாள்-2
31ஆம் தேதி - ஆங்கிலம் முதல் தாள்
ஏப்ரல் 1ஆம் தேதி - ஆங்கிலம் 2-வது தாள்
4ஆம் தேதி - கணிதம்
5ஆம் தேதி - சமஸ்கிருதம், அரபி சிறப்பு மொழி தாள்-3
8ஆம் தேதி - அறிவியல்
10ஆம் தேதி - சமூக அறிவியல்
மெட்ரிகுலேஷன் தேர்வுகள்
மார்ச் 25ஆம் தேதி - தமிழ் முதல் தாள்
26ஆம் தேதி - தமிழ் 2-வது தாள்
27ஆம் தேதி - ஆங்கிலம் முதல் தாள்
28ஆம் தேதி - ஆங்கிலம் 2-வது தாள்
31ஆம் தேதி - கணிதம் முதல் தாள்
ஏப்ரல் 1ஆம் தேதி - கணிதம் 2-வது தாள்
3ஆம் தேதி - அறிவியல் முதல் தாள்
4ஆம் தேதி - அறிவியல் 2-வது தாள்
8 ஆம் தேதி - வரலாறு மற்றும் குடிமையியல்
10ஆம் தேதி - புவியியல் மற்றும் பொருளாதாரம்
ஆங்கிலோ இந்தியன் தேர்வுகள்
மார்ச் 25ஆம் தேதி - மொழித்தாள்
27ஆம் தேதி - ஆங்கிலம் முதல் தாள்
28ஆம் தேதி - ஆங்கிலம் 2-வது தாள்
31ஆம் தேதி - கணிதம் முதல் தாள்
ஏப்ரல் 1ஆம் தேதி - கணிதம் 2-வது தாள்
3ஆம் தேதி - அறிவியல் முதல் தாள்
4ஆம் தேதி - அறிவியல் 2-வது தாள்
8ஆம் தேதி - வரலாறு மற்றும் குடிமையியல்
10ஆம் தேதி - புவியியல்