சங்கர்ராமன் கொலை வழக்கில் இன்று சங்கராச்சாரியார்கள் உள்பட 14 பேர் ஆஜராகாததாலும், இந்த வழக்கில் சங்கராச்சாரியார்கள் ஆஜராக விலக்கு அளிக்க கோரிய மனு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாலும் வழக்கு விசாரணையை புதுச்சேரி நீதிமன்றம் பிப்ரவரி 11ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் மேலாளர் சங்கர்ராமன் கொலை வழக்கு தொடர்பாக காஞ்சி சங்கராச்சாரியார், விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் உள்பட 24 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு புதுச்சேரி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றம் சாற்றப்பட்ட 24 பேரில் காஞ்சி சங்கராச்சாரியார், விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் உள்பட 14 பேர் ஆஜராக வில்லை.
மேலும் இந்த வழக்கில் சங்கராச்சாரியார்கள் ஆஜராக விதிவிலக்கு கோரி தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் வழக்கு விசாரணையை நீதிபதி பிப்ரவரி 11ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.