சென்னை புறநகர் பகுதிகளில் அடுத்தடுத்து மூன்று வீடுகளில் தொடர் கொள்ளை நடந்துள்ளது. இதில் 31 சவரன் நகை, ரூ.9,000 பணம் திருடப்பட்டுள்ளது.
சென்னை ஆதம்பாக்கத்தில் ஒரு வீட்டில் நேற்று இரவு கொள்ளையர்கள் புகுந்து அங்கிருந்த 17 சவரன் நகை, ஒரு லேப்-டாப் திருடிச் சென்றுள்ளனர்.
இதேபோல், அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் பாலன். இவர் குடும்பத்துடன் ஹைதராபாத் சென்றிருந்தார். அதை அறிந்து கொண்ட கொள்ளையர்கள் அங்கு புகுந்து 15 சவரன் நகை, ரூ.7,000 ரொக்கப்பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
புறநகர் பகுதியான கரிகலாம்பேரூர் பகுதியை சேர்ந்த பிரசாந்த் குமார் வீட்டில் இருந்து 2 சரவன் நகை மற்றும் 2 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், சாந்திநகரை சேர்ந்த நரசிம்மராவ் வீட்டில் இருந்த லேப்-டாப் திருடப்பட்டுள்ளது. இந்த கொள்ளை சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.