போலி கடவுச் சீட்டு மூலம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூர் சென்று தமிழகம் திரும்பியவர் திருச்சி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
திருச்சி மாவட்டம், துறையூரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் நேற்று சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்தார். சந்தேகத்தின் பேரில் அவரது கடவுச் சீட்டை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ராஜேந்திரன் கொண்டு வந்தது போலி கடவு சீட்டு என்று தெரிய வந்தது. விசாரணையில் இவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூர் சென்றவர் என்று தெரிய வந்தது.
இதையடுத்து, உடனடியாக அவர் திருச்சி விமான நிலைய காவலரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரை காவலர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.