2008 ஆம் ஆண்டில் மத அடிப்படையிலான விடுமுறை நாட்கள் பற்றிய விவரத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசின் இணைய தளத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: ஜனவரி 11ஆம் தேதி-கிஜிரா புத்தாண்டு (வெள்ளி), 14ஆம் தேதி-போகி (திங்கள்), 23ஆம் தேதி-தைப்பூசம் (புதன்); பிப்ரவரி 6-சாம்பல் புதன் (புதன்), 21ஆம் தேதி-மாசிமகம் (வியாழன்), மார்ச் 6ஆம் தேதி-மகா சிவராத்திரி (வியாழன்), 20ஆம் தேதி-வியாகுல வியாழன் (வியாழன்), 23ஆம் தேதி-ஈஸ்டர் (ஞாயிறு).
ஏப்ரல் 20ஆம் தேதி-சித்ரா பவுர்ணமி (ஞாயிறு), ஜூலை 30ஆம் தேதி-சாப் மிராஜ் (புதன்), ஆகஸ்ட் 2ஆம் தேதி-ஆடிப்பெருக்கு (சனி), 15ஆம் தேதி வரலட்சுமி விரதம் மற்றும் ரிக் உபகர்மா (வெள்ளி), 16ஆம் தேதி-யஜுர் உபகர்மா மற்றும் சாப் பரத், சாப் காதர் (சனி); 17ஆம் தேதி-காயத்திரி ஜெபம் (ஞாயிறு).
செப்டம்பர் 7ஆம் தேதி-சாம உபகர்மா (புதன்), 12ஆம் தேதி-ஓணம் (வெள்ளி), அக்டோபர் 28ஆம் தேதி-தீபாவளி நோன்பு (செவ்வாய்), நவம்பர் 2ஆம் தேதி-சகல ஆத்துமாக்களின் திருநாள் (ஞாயிறு), 27ஆம் தேதி-குருநானக் பிறந்தநாள் (புதன்).
டிசம்பர் 8ஆம் தேதி-அர்பா (செவ்வாய்), 11ஆம் தேதி - கார்த்திகை தீபம் (வியாழன்), 23ஆம் தேதி-வைகுண்ட ஏகாதசி (செய்வாய்), 24ஆம் தேதி - கிறிஸ்துமஸ் விழா (புதன்), 31ஆம் தேதி - புத்தாண்டு நிகழ்ச்சிகள்.