தமிழகம் உள்பட நாடு முழுவதும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு வரும் ஜனவரி 6ஆம் தேதி போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் 69 லட்சம் குழந்தைகளுக்கு கூடுதல் போலியோ தடுப்பு சொட்டு மருந்து அளிக்க தமிழக அரசின் பொது சுகாதாரத் துறை ஏற்பாடுகளைச் செய்துள்ளது. ஜனவரி 6ஆம் தேதி, பிப்ரவரி 10ஆம் தேதி ஆகிய இரு தேதிகளில் கூடுதல் போலியோ தடுப்பு சொட்டு மருந்து கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சுகாதாரத் துறை பணியாளர்கள் உள்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 2 லட்சம் பேர் மூலம் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து கொடுக்கப்படும். இதற்காக பள்ளிகள், பேருந்து நிலையம், இரயில் நிலையம் உள்ளிட்ட பொது இடங்கள் என மொத்தம் 41 ஆயிரம் முகாம்கள் அமைக்கப்படுகிறது.
குழந்தைகளுக்கு ஏற்கனவே போலியோ தடுப்பு சொட்டு மருந்து கொடுக்கப்பட்டிருந்தாலும், காய்ச்சல் இருந்தாலும்கூட மீண்டும் சொட்டு மருந்து கொடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறினர்.