தேசிய ஊனமுற்றோர் மறுவாழ்வுக் கழகம் சார்பில் திருச்சியில் ஜனவரி 4 ஆம் தேதி ஊனமுற்றோருக்கான உதவிக் கருவிகள் கண்காட்சி நடக்கிறது.
தொடர்ந்து 4 நாட்கள் நடக்கவுள்ள இந்தக் கண்காட்சியில் நவீன காதொலிக் கருவிகள், செயற்கை கை மற்றும் கால்கள், சக்கர நாற்காலிகள் எனப் பல்வேறு வகையான உபகரணங்களும் பார்வைக்கும் விற்பனைக்கும் வைக்கப்பட உள்ளன.
இந்தக் கண்காட்சியில் சர்வதேச நாடுகளைச் சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன என்று கண்காட்சி அமைப்பாளர் நீரதா சந்திரமோகன் தெரிவித்தார்.
தேசிய அளவில் முதல் முறையாக தமிழகத்தில் நடக்கவுள்ள இக்கண்காட்சியை மத்திய சமூக நீதித்துறை அமைச்சர் மீரா குமார் தொடக்கி வைக்கிறார்.