தமிழகத்தில் அடுத்துவரும் சட்டப் பேரவைத் தேர்தலில் தே.மு.தி.க.வுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்குமா என்பதைப் பொறுத்திருந்து பாருங்கள் என்று மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் பதிலளித்தார்.
இதுகுறித்து சென்னையில் இன்று செய்தியாளர்கள் கேட்டதற்கு பதிலளித்த அமைச்சர் ஜி.கே.வாசன், தேர்தலில் கூட்டணியை வலுப்படுத்தும் எல்லா முயற்சிகளையும் கட்சி மேலிடம் எடுக்கும் என்றார்.
குஜராத்தில் நரேந்திர மோடி வெற்றிபெற்றிருப்பது குறித்துக் கேட்டதற்கு, ஜனநாயகத்தில் வெற்றி தோல்வி எல்லாம் சகஜம். காங்கிரஸ் பேரியக்கத்திற்கு இது ஒன்றும் புதிதல்ல. நரேந்திரமோடி வெற்றி பெற்றதால் அவர் செய்த அநியாயங்கள் நியாயமாகிவிடாது என்றார்.
மத்திய அரசின் சாதனைகள் பற்றிக் குறிப்பிடுகையில், மத்திய அரசு தமிழகத்தில் 8 முக்கிய துறைகளில் 39,871 கோடி ரூபாய் செலவில் 65 திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்று தெரிவித்தார்.
மேலும், தமிழகத்தில் வெள்ள நிவாரண பணிகளுக்காக முதல்கட்ட நிதியை மத்திய அரசு கொடுத்துள்ளது. மேலும் நிதி பெற்று தர நாங்கள் முயற்சி எடுப்போம் என்றார் வாசன்.