திருவாரூர் அருள்மிகு தியாகராஜர் கோயிலில் இன்று ஆருத்ரா தரிசன விழா சிறப்பாக நடந்தது.
திருவாரூரில் உள்ள அருள்மிகு கமலாம்பாள் சமேத தியாகராஜர் கோயிலில் ஆண்டுதோறும் திருவாதிரையை முன்னிட்டு ஆருத்ரா தரிசன விழா நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நேற்று இரவு நடராஜப் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து இன்று காலை பதஞ்சலி வியாக்ரபாத முனிவருக்கு நடராஜர் வலது பாத தரிசன காட்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
இவ்விழாவை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சுற்றியுள்ள மாவட்டங்களில் இருந்து சிறப்புப் பேருந்துகள் விடப்பட்டுள்ளன.