வேலுரை பாரம்பரிய நகரமாக அறிவிக்க தமிழக அரசு திட்டமிட்டு வருவதாக செய்தி - விளம்பரத்துறை அமைச்சர் பரிதி இளம் வழுதி தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் சுற்றுலாத் துறை வேலுரில் ஏற்பாடு செய்திருந்த கண்காட்சியை தொடங்கி வைத்த பின்னர் அங்கு கூடியிருந்தவர்களிடையே பேசிய தமிழக செய்தி - விளம்பரத்துறை அமைச்சர் பரிதி இளம் வழுதி, வேலுரை பாரம்பரிய நகரமாக அறிவிக்க தமிழக அரசு திட்டமிட்டு வருவதாக கூறினார்.
மேலும், வேலூரை பாரம்பரிய நகரமாக அங்கீகரிப்பதற்கான அறிவிப்பை அரசு விரைவில் வழங்கும் என்றும் வேலூர் நகரை மேம்படுத்துவதற்கான நிதியையும் அரசு ஒதுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இது போன்ற கண்காட்சிகள் மூலம் அரசு இதுவரை 20 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளதாகவும் கூறியுள்ளார்.