இந்து அறநிலையத்துறை ஊழியர்களுக்கு அளிக்கப்படும் சலுகைகளை தங்களுக்கும் வழங்கக் கோரி தமிழ்நாடு கோயில் ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் டிசம்பர் 27ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று அந்த கூட்டமைப்பின் செயலாளர் சம்பத் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2008ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதிக்குள் அனைத்து கோயில் ஊழியர்களுக்கும் பணி கொடை, பென்சனை உடனடியாக தமிழக அரசு வழங்க வேண்டும்.
இந்து அறநிலையத்துறை ஊழியர்களுக்கு சலுகைகள் வழங்குவதை போல் கோயில் ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உடனடியாக தமிழக அரசு அமுல்படுத்த வேண்டும்.
தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் குடும்ப நல நிதியை ரூ.75 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்ச ரூபாயாக வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி டிசம்பர் 27ஆம் தேதி ஒரு உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு கோயில் ஊழியர்கள் கூட்டமைப்பு செயலாளர் சம்பத் கூறியுள்ளார்.