Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஈரோ‌ட்டி‌ல் தொட‌ர் மழை : வீடுக‌ள் ‌மித‌‌க்‌கிறது!

ஈரோ‌ட்டி‌ல் தொட‌ர் மழை : வீடுக‌ள் ‌மித‌‌க்‌கிறது!

Webdunia

, வியாழன், 20 டிசம்பர் 2007 (18:09 IST)
ஈரோடு மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த பலத்த மழையால் மாவட்டத்தின் பெரும்பகுதி நீரால் மூழ்கியது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. ஜவுளி ஏற்றுமதியும், மஞ்சள் வரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக தொடர் மழை பெய்தது. மழையால் தாழ்வான இடங்களில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. குறிப்பாக, பன்னீர் செல்வம் பார்க், மூலப்பாளையம், எல்.ஐ.சி., நகர் பகுதியில் சாலையில் மழைநீர் வெள்ளமாக சென்றது. ஈரோடு பெரும்பள்ளம், ஓடைப்பள்ளங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. நகரில் உள்ள அனைத்து கழிவுகளும் நீரில் அடித்து செல்லப்பட்டன. பெரும்பாலான ஆக்‌கிரமிப்பு பொருட்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன.

பெரியார்நகர் பகுதியில் உள்ள "இ' பிளாக் வீடுகள் மோசமான நிலையில் இருப்பதால், அங்கு வசிக்கும் மக்கள் வீட்டில் ூங்க பயப்படுகின்றனர். இந்த மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் வடமாநிலங்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள ஜவுளி அனுப்பப்பட்டு வருகிறது. ஈரோட்டில் திருவேங்கடசாமி வீதி, ஈஸ்வரன்கோயில் வீதி, சத்தி ரோடு ஆகிய பகுதியில் உள்ள மொத்த குடோனில் இருந்து, ூற்றுக்கும் மேற்பட்ட லாரிகளில் ஜவுளி அனுப்பி வைக்கப்படுகிறது. கிறிஸ்துமஸ், பக்ரீத் பண்டிகைக்காக வடமாநில வியாபாரிகள் ஜவுளி ஆர்டர் அதிகம் கொடுத்திருந்ததால், இம்மாத துவக்கத்தில் இருந்து ஜவுளி அனுப்பும் பணி தீவிரமாக இருந்து வந்தது. இரண்டு நாட்களாக தொடர் மழை பெய்து வருவதால், பிரின்ட் போடுவது, குடோனில் இருந்து ஜவுளி ஏற்றுவது ஆகிய பணி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் ஈரோட்டில் உள்ள நான்கு மஞ்சள் மார்க்கெட்டுக்கும் தமிழகத்தில் பல்வேறு பகுதியில் இருந்தும், கர்நாடகா மாநிலத்தில் இருந்தும் மஞ்சள் மூடை வரத்தாகிறது. மழையால் ஈரோடு மற்றும் கோபி கூட்டுறவு விற்பனை சங்கத்துக்கு மஞ்சள் வரத்து முற்றிலும் நின்று போனது. ஈரோடு ஒழுங்கு முறை விற்பனை கூடத்துக்கு 361 மூ‌ட்டைகளும், வெளிமார்க்கெட்டுக்கு ஆயிரத்து 273 மூ‌ட்டை மஞ்சளும் வரத்தாகியது.

மேலும் இந்த தொடர்மழையால் ஈரோடு சென்னிமழை அருகே உள்ள எழுத்தூர் குரங்கு குட்டை பள்ளத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குரங்குகுட்டை பள்ளத்தின் மீதுள்ள 25 அடி உயர பாலத்தின் மேல் முழங்கால் அளவுக்கு தண்ணீர் செல்கிறது. நேற்று மாலை, ஈரோட்டில் இருந்து மூலனூர் சென்ற பேரு‌ந்து, குரங்கு குட்டை பள்ளம் பாலத்தை கடக்கும் போது நீரில் சிக்கிக் கொண்டது. பேரு‌ந்துக்குள் தண்ணீர் புகுந்து அப்படியே நின்று விட்டதால், பயணிகள் பீதியடைந்தனர். அப்பகுதி மக்கள், பயணிகளை மீட்டனர். தொடர்ந்து வாகனங்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டது. ஈரோட்டில் இருந்து மூலனூர் நேரடி போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ுரங்குகுட்டை பள்ளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 50 க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்தது. 50க்கும் மேற்பட்ட கோழிகள் அடித்து செல்லப்பட்டன. பாதிக்கப்பட்ட மக்கள் அப்பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சோளிபாளையத்தில் வீடுகளுக்குள் வெள்ளம் புகு‌ந்து‌ள்ளது. அவல்பூந்துறை அருகே சோழிப்பாளையம் பகுதி இயற்கையிலேயே பள்ளமான பகுதி. நேற்று 60க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்தது.

Share this Story:

Follow Webdunia tamil