தேனி மாவட்ட வனப் பகுதிகளில் நச்சல்கள் கிடையாது என்று தென் மண்டல காவல்துறை ஐ.ஜி. சஞ்சீவ் குமார் கூறினார்.
தேனி மாவட்டம், வருசநாடு மலையில் நேற்று அதிரடிப்படையினருக்கும், நக்சலைட்டுகளும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 3 நக்சலைட்டுகள் காயம் அடைந்தனர். 2 நச்சல்கள் சரண் அடைந்தனர். காயம் அடைந்த 3 நக்சல்கள் தேனி ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிசிச்சை பெறும் நக்சல்களை இன்று பார்வையிட்ட பின்னர் தென் மண்டல ஐ.ஜி சஞ்சீவ் குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், பிடிபட்ட 3 நக்சல்களை தவிர வனப்பகுதியில் நக்சல்கள் கிடையாது. ஆனாலும் சிறப்பு அதிரடிப்படையினர் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களிடம் 3 நவீன துப்பாக்கிகள், 303 ரக துப்பாக்கி, ஒரு இரட்டை குழல் துப்பாக்கி உள்ளன.
வருசநாடு மலைப்பகுதியில் உள்ள கிராம மக்கள் நக்சலைட்டுகளுக்கு உதவி செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தென் மண்டல காவல்துறை ஐஜி சஞ்சீவ் குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதனிடையே பலத்து பாதுகாப்புக்கு மத்தியில் மருத்துவமனையில் நக்சலைட்டுகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.