பலத்த காற்றால் படகு கவிழ்ந்து நடுக்கடலில் தத்தளித்த 12 மீனவர்கள் மீட்கப்பட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைபட்டினத்தை சேர்ந்த 12 மீனவர்கள் இன்று மீன் பிடித்து விட்டு கரைக்கு திரும்பி கொண்டிருந்தனர்.
அப்போது பெய்த மழையாலும், பலத்த காற்றாலும் அவர்கள் வந்த இரண்டு படகுகள் நடுக்கடலில் மூழ்கியது. அதை பார்த்த அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் அவர்களை காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்தனர்.