கடந்த 2 நாட்களாக பெய்த பலத்த மழை காரணமாக காவிரி டெல்டாபகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கரூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.
தஞ்சாவூரில் அதிகபட்சமாக 380.7 மி.மீ., மழையும், ஒரத்தநாட்டில் 306 மி.மீ., மழையும் பெய்துள்ளது. மேலும் திருமன்னார் 271 மி.மீ., அப்பர் அணைகட்டு 210 மி.மீ., திருச்சி டவுன் 197.4 மி.மீ., மணப்பாறை 196 மி.மீ.., முசிறி 195.2 மி.மீ.., பொன்னனியார் அணைக்கட்டு 177.4 மி.மீ., திருச்சி விமான நிலையம் 172.6 மி.மீ., நன்தியார் 176 மி.மீ., நீடாமங்கலம் 170 மி.மீ., பூடலூர் 164.8 மி.மீ., லால்குடி 153 மி.மீ., புல்லம்பாடி 150.2 மி.மீ., மன்னார்குடி 143 மி.மீ., சமயபுரம் 140 மி.மீ. மழை பெய்துள்ளது.
திருச்சியில் உள்ள தாழ்வான பகுதிகளில் மழை நீர் புகுந்துள்ளது. திருச்சி சிறிரங்கநாத சுவாமி கோயில், சிறிரங்கம் சிறி ஜெம்புகேஸ்வரா அகிலாண்டேஸ்வரி கோயில் ஆகியவற்றில் தண்ணீர் புகுந்துள்ளதால் பக்தர்கள் கடும் பாதிப்புக்கு ஆளாயினர்.
பலத்த மழையால் கல்பட்டிச் சத்திரத்தில் இருந்து அரியலூர் ரயில் நிலையம் வரை தண்டவாளங்கள் நீரில் மூழ்கிக் கிடக்கிறது. இதனால் தூத்துக்குடியில் இருந்து சென்னை வந்த முத்து நகர விரைவு இரயில், திருவனவந்தபுரத்தில் இருந்து சென்னை எழும்பூர் வந்த அனந்தபுரி விரைவு இரயில் ஆகியவை திண்டுக்கல்லில் நேற்று இரவு நிறுத்தப்பட்டது. 4 மணி நேரதாமதத்துக்கு பின் புறப்பட்டு சென்றது.
இதேபோல் மதுரை பாண்டியன் விரைவு இரயில், ஹவுரா-கன்னியாகுமரி விரைவு இரயில் ஆகியவரை சிறிரங்கம், திருச்சி ரயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டது. பின்னர் காலையில் புறப்பட்டு சென்றது.