அடுத்த மூன்றாண்டுக்குள் சென்னையில் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்று மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி கூறினார்.
சென்னையில் நடைபெறும் இந்திய தொழில் கூட்டமைப்பு இன்ப்ஃரா 2007 என்ற கருத்தரங்கில் கலந்து கொள்ள வந்த மத்திய அமைச்சர் ஜெய்பால் ரெட்டி செய்தியாளர்களிடம் கூறுகையில், மெட்ரோ ரயில் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா அடுத்த ஆண்டு நடக்கிறது.
இத்திட்டத்தை தனியாருடன் இணைந்து செயல்படுத்த தமிழக அரசுக்கு விருப்பம் இல்லாததால் மத்திய அரசும், தமிழக அரசும் சேர்ந்து நிதி உதவி செய்கிறது. மீதி நிதி ஜப்பான் வங்கி மூலம் பெறப்படும்.
120 கோடியில் ரூபாய் செலவில் ஒவ்வொரு கி.மீ. தூரத்துக்கும் நகரும்மேடை அமைக்கப்படும். 40 கி.மீ. தூரத்திற்கு அமைக்கப்படும் பாதையில் 14 கி.மீ. தூரம் சுரங்கப்பாதையில் அமைக்கப்படுகிறது என்று ஜெய்பால் ரெட்டி கூறினார்.