Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஊனமுற்ற மாணவ‌ர்களு‌க்கு கல்வி உதவித் தொகை அதிகரிப்பு: கருணா‌நி‌தி!

ஊனமுற்ற மாணவ‌ர்களு‌க்கு கல்வி உதவித் தொகை அதிகரிப்பு: கருணா‌நி‌தி!

Webdunia

, செவ்வாய், 18 டிசம்பர் 2007 (11:17 IST)
தமிழகத்தில் ஊனமுற்ற மாணவ, மாணவியருக்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகையை முதலமை‌ச்ச‌‌ர் கருணா‌நித‌ி உய‌ர்‌த்‌தியு‌ள்ளா‌ர்.

இது தொடர்பாக த‌மிழக சமூகநலத்துறை செயலாளர் என்.எஸ். பழனியப்பன் வெளியிட்ட அரசாணையில், ஊனமுற்ற மாணவ, மாணவியர் கல்வி பயில்வதை ஊக்குவிப்பதற்காக, அவர்களுக்கு கல்வித்தொகை வழங்கும் திட்டத்தை தமிழக அரசு 1981-82ஆம் ஆண்டில் இருந்து செயல்படுத்தி வருகிறது. முதலமைச்சர் கருணாநிதியை பார்வையற்ற மாணவர்கள், பட்டதாரிகள் சங்க பிரதிநிதிகள் சந்தித்து சமர்ப்பித்த கோரிக்கைகளில், கல்வி உதவித்தொகையை இருமடங்காக உயர்த்தவேண்டும் என்ற கோரிக்கையும் இருந்தது.

அதன்பிறகு, ஊனமுற்ற மாணவர்களுக்கு கல்வித்தொகை உயர்த்தி வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தார். இதைத் தொடர்ந்து, ஊனமுற்ற மாணவ, மாணவியருக்கான உதவித்தொகையை உயர்த்தி வழங்க அரசு ஆணையிடுகிறது. இதன்படி, 1 முதல் 5ஆம் வகுப்பு படிப்பவர்களுக்கு ஆண்டில் 10 மாதங்களில் மாதம் ஒன்றுக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.250 உதவித்தொகை ரூ.500 ஆக உயர்த்தப்படுகிறது. இதுபோல், 6 முதல் 8ஆம் வகுப்பினருக்கு ரூ.750-ல் இருந்து, ரூ.1,500 ஆகவும் உயர்த்தப்படுகிறது.

9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பில் படிக்கும் ஊனமுற்றோருக்கு ரூ.1,100-ல் இருந்து 2 ஆயிரமாகவும் உதவித்தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுபோல், பட்டப்படிப்பு படிப்போருக்கு ரூ.1,500-ல் இருந்து 3 ஆயிரமாகவும், முதுநிலை படிப்பு, தொழிற்கல்வி, மருத்துவம் மற்றும் பொறியியல் தொழிற்கல்வி படிப்போருக்கு ரூ.1950-ல் இருந்து ரூ.3,500 ஆக கல்வி உதவித்தொகை உயர்த்தப்பட்டுள்ளது எ‌ன்று த‌‌மிழக அரசு வெ‌ளி‌யி‌‌ட்டு‌ள்ள அரசாரணை‌யி‌ல் தெ‌‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil