டெல்லியில் நடைபெறும் தேசிய வளர்ச்சி குழுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக முதலமைச்சர் கருணாநிதி நான்கு நாள் பயணமாக ஜெட் ஏர்வேஸ் விமானம் மூலம் இன்று மதியம் 1.40 மணிக்கு டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
நக்சலைட் வன்முறைகள் மற்றும் தீவிரவாததாக்குதல் உள்ளிட்ட பல்வேறு, உள்நாட்டு பாதுகாப்பு குறித்து பிரதமர் மன்மோகன் சிங் வரும் 20ஆம் தேதி கூட்டியுள்ள அனைத்து மாநில முதலமைச்சர் கூட்டத்தில் கருணாநிதி பங்கேற்கிறார். இக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் மற்றும் துணை ராணுவ படை, பாதுகாப்பு அமைப்புகளின் உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.
இந்த பயணத்தின் போது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேசுகிறார். டிசம்பர் 21ஆம் தேதி முதல்வர் கருணாநிதி சென்னை திரும்புகிறார்.