Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சேலத்திற்கு விமான போக்குவர‌த்து - அன்புமணி

ஈரோடு செ‌ய்‌தியாள‌ர்

சேலத்திற்கு விமான போக்குவர‌த்து - அன்புமணி
, திங்கள், 17 டிசம்பர் 2007 (14:30 IST)
சேலத்திற்கு விமான போக்குவரத்து ஏற்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய அமைச்சர் அன்புமணி சேலத்தில் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் தெரிவித்தார்.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி சேலத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:

சேலம் பெரிய நகரமாக வளர்ச்சியடைந்து வருகிறது. சேலத்துக்கு ஒரு நாளைக்கு ஒரு விமானம் விட வேண்டும் என விமான போக்குவரத்து அமைச்சர் பிரபுல் படேலிடம் கேட்டுள்ளோம். விமான சேவை தொடர்பாக விஜய் மல்லையாவுக்கு கடிதம் எழுதியிருக்கிறேன்.

ஆறு மாதம் முன், விமானநிலைய ஆணைய தலைவர் ராமலிங்கத்திடம், சேலம் விமான நிலைய ஓடுபாதை விரிவாக்கத்துக்கு கேட்டு கொண்டேன்.

மருத்துவத்துறை மாநிலங்களை சார்ந்தது. ஒவ்வொரு மாநிலத்துக்கும், தேசிய கிராமப்புற சுகாதார திட்டத்தின் கீழ் மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்கிறது.

சுகாதாரத்துறையில், தமிழகம் முதலிடத்தில் உள்ளது. மற்ற மாநிலங்கள் இன்னும் மோசமாக உள்ளன. குழந்தை இறப்பு விகிதம் கேரளாவில் குறைவாக உள்ளது. மருத்துவ மாணவர்கள் பிரச்னையில் சாம்பசிவராவ் ஆணைய அறிக்கை வந்தபிறகு தான் நடவடிக்கை எடுக்க முடியும். அந்த ஆணைய அறிக்கை நான்கு வாரத்துக்குள் தெரியவரும்.

ராமதாஸ் ஆற்காடு வீராசாமி பிரச்னையில் அறிக்கை மூலமாக விளக்கம் முடிந்து விட்டது.

நியாயமான விஷயங்களில் நாங்கள் எதிர்ப்பு காட்டி வருகிறோம். சிறப்பு பொருளாதார மண்டலம், சென்னை விமான நிலைய விரிவாக்கம், துணை நகரம் உள்ளிட்ட பிரச்னைகளில், ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்பட்டோம். துணை நகரம் அமைக்க இருந்த இடத்தில், பா.ம.க.,வினர் ஆக்ரமிப்பு செய்திருப்பதாக, அமைச்சர் ஆற்காடு வீராசாமி தெரிவித்துள்ளார்.

ஆக்ரமிப்பு இருந்தால், நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே. அவர்கள் கையில் தான் அதிகாரம், அதிகாரிகள் இருக்கிறார்களே? "அனல்மின் நிலையம் அமைப்பதில் கூட, விவசாய நிலத்தை எடுக்க வேண்டாம்" என்று தான் நாங்கள் கூறினோம்.

மின்வெட்டு கோடையில் தான் வரும். இப்போது வந்துள்ளது. மின்வெட்டு வராமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பசுமை தாயகம் அமைப்புக்காக ரூ.11 கோடி எடுத்துள்ளதாக, புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். அரசியலில் அவரை எல்லோரும் மறந்து விட்டனர். அவர் தன்னை வெளிப்படுத்த கோமாளித்தனமாக உளறுகிறார்.

ஆறு பைசாவை கூட எடுக்க முடியாது. எடுக்கவும் மாட்டோம். இந்தியா முழுவதும் 30 மாவட்டங்களில் மூளைக்காய்ச்சல் தடுப்பூசி போட இருக்கிறோம்.

தமிழகத்தில் இரண்டு அல்லது மூன்று மாவட்டங்களில் மூளைக்காய்ச்சல் தடுப்பூசி போடப்படும். ஹெபடைட்டிஸ் பி தடுப்பூசி போட தமிழக அரசுக்கு அனுமதி கொடுத்துள்ளோம்.

சேலம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கான கட்டிட பணிகள் ஜனவரிக்குள் துவங்கி விடும். மருத்துவ கல்லூகளை புதுப்பிக்க ரூ.100 கோடி ஒதுக்க வேண்டும் என தமிழக அரசிடம் விடுத்த கோரிக்கை இன்னமும் நிலுவையில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil