Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எ‌ன்‌னிடமு‌ம் ப‌ட்டிய‌ல் உ‌ள்ளது : ராமதா‌ஸ் ப‌திலடி

எ‌ன்‌னிடமு‌ம் ப‌ட்டிய‌ல் உ‌ள்ளது : ராமதா‌ஸ் ப‌திலடி
, வெள்ளி, 14 டிசம்பர் 2007 (10:46 IST)
தமிழகம் முழுவதும் ஏரி புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து விற்பனை செய்த குபேரர்கள் யார்? யாருடைய தயவில் இருக்கிறார்கள்? எத்தகையப் பதவியில் இருக்கிறார்கள் என்றப் பட்டியல் என்னிடம் உள்ளது. தேவைப்படும்போது அந்தப் பட்டியல்கள் வெளியிடப்படும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், அமைச்சர் ஆர்க்காடு வீராசாமிக்கு பதில் அளித்துள்ளார்.

இதுகுறித்து ராமதாஸ் வெளியிட்டு‌ள்ள அறிக்கை‌யி‌‌ல், தனியார் நிறுவனங்களின் நலனுக்காக அரசாங்கமே நிலங்களை எடுத்துக்கொடுக்க முன்வந்திருப்பதற்கே கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இது நியாயமானது என்பதால், அவர்களுக்கு நான் ஆதரவு அளிக்கிறேன்.

இதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல், வன்னியர் கல்வி அறக்கட்டளை தொடங்கியுள்ள கல்லூரி மீது அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி அவதூறு புரளிகளை கிளப்பி வருகிறார்.

புஞ்சை நிலம் என்றும், சவுக்கு பயிரிடப்பட்ட நிலம் என்றும் ஆதாரத்தைத் தேடிப்பிடித்து ஆர்க்காடு வீராசாமி கூறி வருகிறார். எதை எதை அடித்து, எப்படியெல்லாம் திருத்தி ஆதாரத்தை வெளியிடப் போகிறார்கள் என்பது அவருக்கு தெரிவதற்கு முன்பே, எனக்கு விவரம் சொல்லப்பட்டது.

வேறு பயிர் எதுவும் விளையாது என்ற நிலையில் உள்ள நிலத்தில்தான் சவுக்கு பயிரிடுவர். இந்நிலையில் அதுவும் கருகிப் போய்விட்டது என்ற நிலையில், நிலத்தின் சொந்தக்காரர்கள் விருப்பப்பட்டு விற்பனை செய்த இடத்தில்தான் கல்லூரி கட்டப்பட்டுள்ளது.

மேலும் ஆர்க்காடு வீராசாமி கூறுவதுபோல் வன்னியர் கல்வி அறக்கட்டளையால் புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்படவில்லை. அமைச்சரே நேரடியாக வந்து இதை அடையாளம் காணலாம்.

வன்னிய மக்களின் ஒத்துழைப்பு மற்றும் பங்களிப்போடு உருவாக்கப்பட்டதுதான் இந்தக் கல்வி நிலையம். தேன் கூட்டில் கல் வீசி அழிப்பதைப் போல், ஆர்க்காடு வீராசாமி கல்லூரி மீது அவதூறு பரப்பி களங்கப்படுத்த முயற்சிக்கிறார்.

கல்லூரியைச் சுற்றி அரசுப் புறம்போக்கு நிலம் இருக்கலாம். ஆனால் அவை ஆக்கிரமிப்பு செய்யப்படவில்லை. ஆனால் தமிழகம் முழுவதும் ஏரி புறம்போக்கு நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு விற்கப்பட்டிருக்கின்றன. இதற்கு காரணமான அனைவரின் பட்டியலும் என்னிடம் உள்ளது. தேவைப்படும்போது பட்டியல் வெளியிடப்படும் என்று ராமதாஸ் கூ‌றியு‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil