மாணவர்களை மதம் மாற வற்புறுத்திய ஆசிரியரை இடை நீக்கம் செய்து கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
கரூர் மாவட்டம், மஞ்சபுள்ளிபட்டி நகர பஞ்சாயத்து துவக்கப் பள்ளி மாணவர்களை கட்டாய மதம் மாற வலியுறுத்துவதாகவும், மாணவிகள் தலையில் பூ வைக்க கூடாது என்று கூறி வரும் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அந்த பகுதி மக்கள், மாவட்ட பா.ஜ.க. தலைவர் சிவமணி தலைமையில் நேற்று சாலை மறியல் செய்தனர்.
இது பற்றி தகவல் அறிந்ததும், காவல்துறையினரும், கல்வித்துறை அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வித்துறை அதிகாரிகள் உறுதி அளித்தையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டனர்.
இந்த நிலையில் மாணவர்களை கட்டாய மதமாற்றம் செய்தது விசாரணையில் தெரியவந்ததை அடுத்து சம்பந்தப்பட்ட ஆசிரியரை இடை நீக்கம் செய்து கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.