அறந்தாங்கி அருகே உள்ள சர்க்கரை ஆலையில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது பெரிய இரும்பு தகடு விழுந்ததில் ஒருவர் பலியானார். 7 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம், அறங்தாங்கி அருகே குரும்பூர் என்ற இடத்தில் தனியாருக்கு சொந்தமான சர்க்கரை ஆலையில் ஒன்று உள்ளது. இங்கு தொழிலாளர்கள் வெல்டிங் வேலை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது பெரிய இரும்பு தகடு விழுந்து 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். 7 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இறந்தவர் திருச்சி மாவட்டம், வெட்டவைத்தழையை சேர்ந்த குமார் என்பது தெரியவந்துள்ளது.