''எப்போது தேர்தல் வந்தாலும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தனித்தே போட்டியிடும்'' என்று அக் கட்சியின் தலைவர் சரத்குமார் கூறினார்.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் சரத்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், கட்சியின் முதல் அரசியல் மாநாடு மதுரையில் ஜனவரி 20ஆம் தேதி நடக்கிறது. தமிழகம் முழுவதும் பரவலாக மின் தடை உள்ளது. மின்சாரத்தை பொறுத்தவரையில் தொழிற்சாலைகளுக்கு எவ்வளவு மின்சாரம் தேவை, அன்றாட தேவைக்கு எவ்வளவு தேவை என சரியான திட்டம் வகுத்து செயல்பட வேண்டும்.
எந்த அரசாக இருந்தாலும் தொலைநோக்குடன் செயல்படவேண்டும். எந்த கட்சி ஆட்சி செய்தாலும் அது 5 ஆண்டுகள் இருக்கவேண்டும். தேர்தல் எப்போது வந்தாலும் நாங்கள் தனித்து நின்று செயல்படுவோம். கூட்டணி எங்களுக்கு தேவை இல்லை. தன்னம்பிக்கை, உழைப்பு இருந்தால் வெற்றி பெறலாம்.
தமிழகத்தில் வன்முறை அரங்கேறி வருவதால் சட்டம்-ஒழுங்கை தெரிந்து கொள்ளலாம். 1976ஆம் ஆண்டு லாரிகளுக்கான தேசிய பெர்மிட்டுக்கு ரூ.500 கட்டணம் இருந்தது. இப்போது ரூ.2,500 ஆக உள்ளது. அதுவும் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது. இதை ஒரே தொகையாக நிர்ணயம் செய்யவேண்டும் என்று சரத்குமார் கூறினார்.