Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தனியார் ஆட்டோ, வேன்களில் வெளிர் நீல வண்ணம் பூச அரசு உத்தரவு!

Advertiesment
தனியார் ஆட்டோ, வேன்களில் வெளிர் நீல வண்ணம் பூச அரசு உத்தரவு!

Webdunia

, வியாழன், 6 டிசம்பர் 2007 (10:20 IST)
தனியார் ஆட்டோ ரி‌க்க்ஷாக்கள், ஷேர் ஆட்டோக்கள், வேன்களில் வெளிர் நீல வண்ணம் (ஸ்கை ப்ளூ) பூச வேண்டும் என்று தமிழக போக்குவரத்துத் துறை ஆணையிட்டுள்ளது.

இது தொடர்பாக போக்குவரத்து ஆணையர் சி.பி.சிங் வெளியிட்ட செய்திக் குறிப்‌பி‌ல், நகரங்களில் ஆட்டோ ரி‌க்க்ஷாக்களைப் பெரும்பான்மையான மக்கள் பயன்படுத்துகிறார்கள். அவற்றில் பல அனுமதியின்றி ஓட்டப்படுவதாக ஏராளமான புகார்கள் வந்தன. அனைத்து ஆட்டோ ரி‌க்க்ஷாக்களும் மஞ்சள் வண்ணத்தில் இருப்பதால் எது வாடகை ஆட்டோ, எது தனியார் ஆட்டோ என்று இனம் காண முடியவில்லை. இதன் காரணமாக, ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால், அதில் பயணம் செய்வோருக்கு உரிய காப்பீடு கிடைக்காது.

இப்பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையிலும் அனுமதியில்லாத ஆட்டோக்களை எளிதில் இனம் காணவும் மோட்டார் வாகன விதியில் (1989) புதிதாக "364-ஏ' என்ற பிரிவைத் தமிழக அரசு உருவாக்கியுள்ளது. இதன்படி ஆட்டோ, ஷேர் ஆட்டோ, வேன்களுக்கு வெளிர்நீலம் (ஸ்கை ப்ளூ) வண்ணம் பூச வேண்டும். அத்துடன் "வாடகைக்கு அல்ல' என்று தமிழிலும் "சர்ற் ச்ர்ழ் ஏண்ழ்ங்' என்று ஆங்கிலத்திலும் வாகனத்தின் இரு பகுதிகளிலும் தெளிவாகத் தெரியும் வகையில் குறிப்பிட வேண்டும்.

பழைய ஆட்டோக்களைக் கொடுத்துவிட்டு புதிய ஆட்டோ வாங்குவோர், வாடகை ஆட்டோவை சொந்தப் பயன்பாட்டுக்காக இயக்குவதற்காக அனுமதியை ஒப்படைப்போர் அந்த வாகனத்துக்கு வெளிர்நீல வண்ணம் பூச வேண்டும். அது மட்டுமின்றி, "வாடகைக்கு அல்ல' என்று தமிழிலும் "சர்ற் ச்ர்ழ் ஏண்ழ்ங்' என்று ஆங்கிலத்திலும் வண்டியின் முன்னும் பின்னும் எழுதி, அதற்கான சான்றைப் பெற வேண்டும். வரும் 31ஆ‌ம் தேதிக்குள் இது போல் அனைத்து வாகனங்களுக்கும் வண்ணம் பூச வேண்டும். பொதுமக்கள் இது போல் ஆட்டோ, ஷேர் ஆட்டோ, வேன்களில் வெளிர்நீலம் பூசியிருந்தாலோ, "வாடகைக்கு அல்ல' என்று குறிப்பிட்டிருந்தாலோ வாடகைக்குப் பயணம் செய்ய வேண்டாம் எ‌ன்று கே‌ட்டு‌க் கொ‌ள்ள‌ப்ப‌ட்டு‌ள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil