Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குவிண்டால் நெல்லுக்கு ரூ.1000: மத்திய அரசை கருணா‌நி‌தி க‌‌ட்டாய‌ப்படு‌த்த வேண்டும்- ஜெயலலிதா!

குவிண்டால் நெல்லுக்கு ரூ.1000: மத்திய அரசை கருணா‌நி‌தி க‌‌ட்டாய‌ப்படு‌த்த வேண்டும்- ஜெயலலிதா!

Webdunia

, புதன், 5 டிசம்பர் 2007 (15:30 IST)
கு‌வி‌ண்டா‌லநெ‌ல்லு‌‌க்கஆ‌யிர‌மரூபா‌யவ‌ழ‌ங்ம‌த்‌திஅரசகருணா‌நி‌தி க‌‌ட்டாய‌ப்படு‌த்த வே‌ண்டு‌ம் எ‌ன்று அ.இ.அ.த‌ி.ு.க. பொது‌சசெயலாள‌ரஜெயல‌லிதவ‌லியுறு‌த்த‌ியு‌ள்ளா‌ர்.

இததொட‌ர்பாஅ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், நடப்பு ஆண்டில் வடகிழக்குப் பருவ மழை பெய்த தன் விளைவாக விவசாயிகள் மகிழ்ச்சியோடு வேளாண் பணிகளை துவக்கினாலும், பேக்டம்பாஸ், டி.ஏ.பி. போன்ற உரங்கள் கிடைக்காததன் காரணமாக அல்லல்பட்டு வருகின்றனர். உரங்கள் தட்டுப்பாடு இன்றி விவசாயிகளுக்கு கிடைக்கச் செய்ய வே‌ண்டிய பொறு‌ப்பு மாநில அரசிற்கு உண்டு. அதையும் மீறி தட்டுப்பாடு ஏற்படுவதாக தெரிந்தால் மத்திய அரசின் இருப்பில் இருந்து தமிழ் நாட்டிற்குத் தேவையான உரங்களை கேட்டுப் பெறவேண்டும்.

பயிர்க் கடனும் நிறுத்தப்பட்டு, உரங்கள் வழங்குவதிலும் தட்டுப்பாடு ஏற்பட்டதன் காரணமாக விவசாயிகள் பெரும் அவல நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். தி.மு.க. அரசின் மெத்தனப் போக்கால் விவசாயப் பணிகளை விவசாயிகளால் முழுமையாக செய்ய முடிய வில்லை. இதன‌ா‌ல் விவசாயிகள், நுகர்வோர்கள் என இரு தரப்பினருமே பாதிக்கப்படுவர்.

கருணாநிதி, விவசாயிகளுக்கு உரங்கள் தடங்கலின்றி கிடைக்கவும், நெல்லுக்கு ஆதரவு விலையாக ஆயிரம் ரூபாய் என உயர்த்தித் தரக் கோரியும் மத்திய அரசை கட்டாயப்படுத்த வேண்டும். பயிர்க் கடன்களை உடனடியாக வழங்கவும், அனைவருக்கும் தரமான ரேஷன் அரிசி வழங்கவும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜெயல‌லிதா வலியுறுத்‌தியு‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil