Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரேஷ‌ன் ‌அ‌ரி‌சி கட‌த்த‌ல்: ம.பு.க. ‌விசாரணை‌க்கு த‌‌மிழக அரசு ப‌ரி‌ந்துரை!

ரேஷ‌ன் ‌அ‌ரி‌சி கட‌த்த‌ல்: ம.பு.க. ‌விசாரணை‌க்கு த‌‌மிழக அரசு ப‌ரி‌ந்துரை!

Webdunia

, செவ்வாய், 4 டிசம்பர் 2007 (17:42 IST)
புது‌ச்சே‌ரி ர‌‌யி‌ல் ‌நிலைய‌த்‌தி‌ல் ‌பிடிப‌ட்ட 2 ஆ‌யிர‌‌மட‌னரேஷ‌னஅ‌ரி‌சி ‌பிடிப‌ட்டதகு‌றி‌த்து ‌விசாரணநட‌த்ம‌த்‌‌திபுலனா‌ய்வகழக‌த்‌தி‌ற்கு (‌ி.‌ி.ஜ.) த‌மிழஅரசப‌ரி‌ந்துரசெ‌ய்து‌ள்ளது.

புதுச்சேரி ரயில் நிலையத்திலி‌இரு‌ந்தஅ‌க்டோப‌ர் 27ஆ‌மதே‌தி 2 ஆயிரம் மெட்ரிக் டன் ரேஷ‌னஅரிசியை கட‌த்த முய‌ன்றபோது புதுச்சேரி உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினால் கைப்பற்றப்பட்டது. இது குறித்த வழக்கு புதுச்சேரியில் பதிவு செய்யப்பட்டுள்ளதாலும், இவ்வழக்கில் ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்கள் சம்பந்தப்பட்டுள்ளதாலும், வழக்கின் தீவிர தன்மையினை கருத்தில் கொண்டும், மத்திய புலனாய்வுத் துறை விசாரணைக்கு பரிந்துரை செய்யப்படுமென்று ஏற்கனவே தமிழக அரசு அறிவித்திருந்தது.

மேலும், தமிழக குடிமைப் பொருள் குற்ற புலனாய்வுத் துறை அலுவலர்கள், புதுச்சேரி அலுவலர்களை நேரில் சந்தித்து, இவ்வழக்கில் தொடர்புடைய ஆவணங்களை பரிமாறிக் கொண்டனர். இதைத் தொடர்ந்து, புதுச்சேரி காவல் துறை விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது. தமிழகத்திலும், இதில் தொடர்புடைய நபர்கள் மற்றும் ஆவணங்கள் குறித்த விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.

தமிழக அரசு ஏற்கனவே அறிவித்தவாறு, இவ்வழக்கு பற்றிய விரிவான விவரங்கள் மற்றும் இவ்வழக்கின் தீவிர தன்மையை எடுத்துரைத்து, மத்திய புலனாய்வுத் துறை தலைவர் விஜய்சங்கருக்கு, வழக்கினை மத்திய புலனாய்வுத் துறை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டுமெனக்கோரி அ‌க்டோப‌ர் 23ஆ‌ம் தே‌தி விரிவான அறிக்கை தமிழக அரசால் அனுப்பப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இவ்வழக்கு சம்பந்தமாக தொடர்ந்து நடைபெற்றுவரும் விசாரணை பற்றியும் மத்திய புலனாய்வுத் துறையிடம் இவ்வழக்கை விரைவாக ஒப்படைக்க புதுச்சேரி அரசை கேட்டுக்கொள்வது என்றும், இதுசம்பந்தமாக தமிழகம் தொடர்புடைய விசாரணையை விரைவுபடுத்த வேண்டுமென்றும் அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil