Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சங்கரராமன் கொலை வழக்கு: ரவி சுப்பிரமணியம் விடுவிக்க கோரி ஆட்கொணர்வு மனு!

சங்கரராமன் கொலை வழக்கு: ரவி சுப்பிரமணியம் விடுவிக்க கோரி ஆட்கொணர்வு மனு!
, திங்கள், 3 டிசம்பர் 2007 (21:21 IST)
காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கில் அரசு சாட்சியாக (அப்ரூவர்) மாறிய ரவி சுப்பிரமணியனை விடுவிக்கக் கோரி அவரது சகோதரர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார்.

இம்மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் பி.டி. தினகரன், ஆர். ரகுபதி ஆகியோர் கொண்ட அமர்வு, காஞ்சிபுரம் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளருக்கும், சிறைத்துறை துணை கண்காணிப்பாளருக்கும் விளக்கமளிக்குமாறு தாக்கீது அனுப்ப உத்தரவிட்டது.

சங்கரராமன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ள காஞ்சி சங்கராச்சாரியார்கள் உட்பட அனைவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசு தரப்பு சாட்சியான தனது சகோதரர் மட்டும் இன்னமும் சிறையில் வாடிக்கொண்டிருப்பதாகக் கூறியுள்ளார்.

சங்கரராமன் கொலை வழக்கில் சம்மந்தப்பட்டவரல்ல தனது சகோதரர் என்றும், ஆனால், வழக்கின் முழு விவரமும் அறிந்தவர் என்றும், குற்றவியல் நடைமுறைச் சட்ட விதிமுறைகளின் காரணமாக அவர் பிணையில் விடுதலை பெற முடியாத நிலையில் உள்ளார் என்றும் அம்மனுவில் ரவி சுப்பிரமணியத்தின் சகோதரர் முரளி கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil