Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வேப்ப மரத்தில் சுரக்கும் திரவம் ஈரோட்டில் பரபரப்பு

ஈரோடு செ‌ய்‌தியாள‌ர்

வேப்ப மரத்தில் சுரக்கும்  திரவம் ஈரோட்டில் பரபரப்பு
, திங்கள், 3 டிசம்பர் 2007 (11:26 IST)
ஈரோடு கருங்கல்பாளையம் அருகே வேப்ப மரத்தில் இனிப்பு சுவையுடைய திரவம் விழுந்து கொண்டே இருக்கிறது. இதனால் அப்பகுதி மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பெண்கள் மரத்துக்கு மஞ்சள் துணியில் பாவாடை கட்டி வழிபட்டு வருகின்றனர்.

ஈரோடு கருங்கல்பாளையம் ஆறுமுகம் வீதியை சேர்ந்த இளங்கோவன் (48) நகை வேலை செய்பவர். இவரது வீட்டு முன் ஒரு வேப்பமரம் உள்ளது. பத்தாண்டாக அந்த மரம் உள்ளது. அதன் அருகே பாலவிநாயகர் என்ற சிறிய கோயில் உள்ளது. அப்பகுதியினர் விநாயகருக்கு தினமும் தண்ணீர் ஊற்றி வழிபடுவது வழக்கம். கடந்த நான்கு நாட்களுக்கு முன் விநாயகரை வழிபடச் சென்றவர் மீது சிறிய சாரல் விழுந்துள்ளது.

"பனித்துளி அல்லது மழைச் சாரலாக இருக்கும்' என்று அவர் நினைத்துள்ளார். மரத்தை விட்டு வெளியே வந்ததும் சாரல் விழுவது நின்றுள்ளது. மரத்தடியில் சென்றால், மீண்டும் சாரல் விழுந்தது. அதை துடைத்ததும் "பிசுபிசு'ப்புடன் இருந்துள்ளது. மரத்தை சுற்றி ஈ கூட்டமாக உள்ளது. வேப்பிலைகளில் இருந்து கசியும் திரவம் ஒரு வகை இனிப்புச் சுவையுடன் உள்ளது.

ஆச்சர்யமடைந்த மக்கள், அப்பகுதியைச் சேர்ந்த தமிழ்நாடு பிராமணர் சங்க ஈரோடு கிளை தலைவர் சுப்பிரமணிய அய்யரிடம் இதுபற்றி தெரிவித்தனர். அவர், மரத்தடியை சுத்தம் செய்து, சூடம் ஏற்றி வழிபட்டார். பெண்கள் மரத்துக்கு மஞ்சள், குங்குமம் பூசினர். மஞ்சள் துணி, பாவாடை சுற்றி வழிபட்டு வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil