மருத்துவ மாணவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி கேட்டுக் கொண்டுள்ளார்.
டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் மத்திய அமைச்சர் அன்புமணி கூறுகையில், சாம்பசிவராவ் குழுவின் அறிக்கை எங்களிடம் வந்த பிறகுதான் இறுதி முடிவு எடுக்கப்படும். இதனால் மருத்துவ மாணவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு விட்டு கல்லூரிக்கு திரும்ப வேண்டும்.
மருத்துவ மாணவர்களின் போராட்டத்தை கட்டுப்படுத்துவது மாநில அரசு சம்பந்தப்பட்ட விஷயம் என்று அன்புமணி தெரிவித்தார்.