Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‌மி‌‌ன்த‌ட்டு‌ப்பா‌டு குறித்து தவறான தகவலை கூறுகிறார் ஜெயல‌லிதா: ஆற்காடு வீராசாமி!

‌மி‌‌ன்த‌ட்டு‌ப்பா‌டு குறித்து தவறான தகவலை கூறுகிறார் ஜெயல‌லிதா: ஆற்காடு வீராசாமி!

Webdunia

, சனி, 1 டிசம்பர் 2007 (16:10 IST)
த‌மிழக‌த்‌தி‌ல் ஏ‌ற்ப‌‌ட்டு‌ள்ள ‌மி‌ன் த‌ட்டு‌ப்பா‌ட்டு ப‌ற்‌றி ஜெயல‌லிதா தவறான தவலை கூ‌றியு‌ள்ளா‌ர் எ‌ன்று ‌‌மி‌ன்துறை அமை‌ச்ச‌ர் ஆ‌ற்காடு ‌வீராசா‌மி க‌ண்டன‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

அமைச்சர் ஆற்காடு வீராசாமி சென்னையில் இன்று செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் கூறுகை‌யி‌ல், தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சார தட்டுப்பாட்டை சமாளிக்க முதலமைச்சர் கருணாநிதி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அ‌ஸ்ஸாம், ஹரியானா ஆகிய மாநிலங்களில் இருந்து 300 மெகாவாட் மின்சாரத்தை பிப்ரவரி மாதத்தில் இருந்து பெறவிருக்கிறோம். மத்திய அரசின் சிறப்பு மின் தொகுப்பில் இருந்து 500 மெகாவாட் மின்சாரம் விரைவில் கிடைக்க இருக்கிறது. நெய்வேலியில் இருந்து வருகிற 10ஆ‌ம் தேதி முதல் கூடுதலாக 400 மெகா வாட் மின்சாரம் தர ஒப்புக் கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் நானும், முதலமைச்சரும் அக்கறை இல்லாமல் இருப்பதால் தமிழ்நாட்டில் மின்சாரம் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதாகவும், அ.தி.மு.க. ஆட்சி நடந்த 5 ஆண்டுகாலத்தில் புதிதாக 2027 மெகாவாட் மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டதாகவும் எண்ணூர், தூத்துக்குடி மின்நிலையங்கள் சிறப்பாக பராமரிக்கப்பட்டதாகவும் இப்போது பராமரிக்கபடாமல் இருப்பதாகவும் ஜெயல‌லிதா கூறி இருக்கிறார்.

இது தவறான தகவலாகும். 2001 முதல் 2006 வரை அ.தி.மு.க. ஆட்சியில் கூடுதலாக 348.5 மெகாவாட் மின்சாரம் தான் உற்பத்தி செய்யப்பட்டது. ஆனால் ஜெயலலிதா பல மடங்கு மின் உற்பத்தி நடந்ததாக தவறான தகவலை கூறி இருக்கிறார்.

தற்போது தூத்துக்குடி, சென்னை, மேட்டூர், எண்ணூர் ஆகிய மின் உற்பத்தி நிலையங்கள் சிறப்பாக செயல்பட்டு வருவதனால் மத்திய அரசின் பாராட்டையும் பரிசையும் தமிழக மின் வாரியம் பெற்றுள்ளது. அது போல காற்றாலை மின் உற்பத்தியில் தமிழ்நாடு சிறப்பாக செயல்படுவதற்கான பரிசை குடியரசு தலைவர் கடந்த 26-ந் தேதி தமிழக மின் வாரிய அதிகாரிகளிடம் வழங்கி இருக்கிறார். இந்த உண்மைகளை மறைத்து ஜெயலலிதா மக்களை திசைதிருப்ப முயற்சி செய்கிறார்.

கோடை காலத்தில்தான் மின் தட்டுப்பாடு ஏற்படும். இந்த ஆண்டு காற்றாலை மின் உற்பத்தி முன்னதாகவே குறைந்ததால் தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதை சமாளிக்க முன்கூட்டியே அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தற்போது நமக்கு தேவையான மின்சாரம் 8,500 மெகாவாட். ஆனால் கிடைக்கும் மின்சாரம் 7,800 மெகாவாட். 700 மெகாவாட் குறைந்து உள்ளது.

கோடை காலத்தில் 1000 முதல் 1200 மெகாவாட் வரை மின் தட்டுப்பாடு இருக்கும். அதை தடுப்பதற்கு தான் அரசு இப்போதே முயற்சி எடுத்து வருகிறது. ஒப்பந்தம் செய்த அய‌ல்நாட்டு தொழிற்சாலைகளில் பல இயங்கவில்லை என ஜெயலலிதா கூறுகிறார். அது தவறு. பெரும்பாலான தொழிற்சாலைகள் இயங்குகின்றன. ஜெயலலிதா நேரில் சென்று பார்த்தால் உண்மை அவருக்கு புரியும் எ‌ன‌்று ஆ‌ற்காடு ‌வீராசா‌‌மி கூ‌றினா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil