Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‌மின் வெட்டை கண்டித்து அ.இ.அ.தி.மு.க. போராட்டம்: ஜெயலலிதா

‌மின் வெட்டை கண்டித்து அ.இ.அ.தி.மு.க. போராட்டம்: ஜெயலலிதா

Webdunia

, சனி, 1 டிசம்பர் 2007 (17:48 IST)
தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு அடிப்படையாக விளங்கும் மின்சார உற்பத்தியைப் பெருக்க த‌மிழஅரசஉடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி டிச‌ம்ப‌ர் 3ஆ‌‌ம் தே‌தி‌யி‌ல் இரு‌ந்து 7ஆ‌ம் தே‌தி‌க்கு‌ள் ஏதாவது ஒரு நா‌ளி‌ல் போரா‌ட்ட‌ம் நட‌த்த‌ப்படு‌‌ம் எ‌ன்று அ.இ.அ.‌தி‌.மு.க. பொது‌ச் செயலாள‌ர் ஜெயல‌லிதா கூ‌றியு‌ள்ளா‌ர்.

இததொட‌ர்பாக அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த ஆண்டு காற்றாலை மூலமாக கிடைக்க வேண்டிய 1,500 மெகாவாட் மின்சாரம் எதிர் பாராதவிதமாக கிடைக்காததை மின்சாரப் பற்றாக்குறைக்கு ஒரு காரணமாக சொல்லியிருக்கிறார் ஆற்காடு வீராசாமி. இது அவரது கையாலாகாத்தனத்தையே காட்டுகிறது. பொதுவாக காற்று அதிகமாக வீசும் மாதங்களான ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் எதிர்பார்க்கும் மின்சாரம் காற்றாலைகளின் மூலம் கிடைக்கும். மற்ற மாதங்களில் கிடைக்காது. இது ஒன்றும் எதிர்பாராதவிதமானது அல்ல.

அடு‌த்ததாக, என்.எல்.சி. மூலமாக கிடைக்க வேண்டிய 500 மெகாவாட் மின்சாரமும், மத்திய அரசின் தொகுப்பில் இருந்து கிடைக்க வேண்டிய 500 மெகாவாட் மின்சாரமும் கிடைக்காததும் தான் தற்போதைய பற்றாக்குறைக்கு மேலும் ஒரு காரணம் என்று குறிப்பிட்டிருக்கிறார். 2006-ஆம் ஆண்டு இறுதிக்குள் 10,769 மெகாவாட் என்ற அளவிற்கு, அதாவது கூடுதலாக 758 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வழங்கப்படும் என்று தி.மு.க. ஆட்சியின் 2006-2007 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், 2007-2008 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் இது குறித்து ஒரு வார்த்தை கூட குறிப்பிடப்படவில்லை. வீராசாமியின் கூற்றுப்படி தமிழ் நாட்டின் தற்போதைய மின் உற்பத்தி நிறுவு ‌திற‌ன் 7,500 மெகாவாட் மட்டுமே. தி.மு.க. அரசின் திட்டங்கள் அனைத்தும் இந்த லட்சணத்தில் தான். தற்போது இருக்கின்றன தமிழ்நாட்டில் உள்ள பல மின் நிலையங்கள் சரியாக பராமரிக்கப்படாதது, தூத்துக்குடி, வட சென்னை போன்ற மின் நிலையங்களில் அடிக்கடி பழுது ஏற்படுதல், கருணாநிதி, ஆற்காடு வீராசாமி ஆகியோரின் கவனக் குறைவு ஆகியவை தான் தற்போது ஏற்பட்டுள்ள மின்சாரப் பற்றாக்குறைக்கு முக்கிய காரணங்களே தவிர வேறு எதுவும் இல்லை.

தமிழகத்தை இருளில் மூழ்கடிக்கச் செய்த தி.மு.க. ஆட்சியின் அவல நிலையைக் கண்டித்தும், தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு அடிப்படையாக விளங்கும் மின்சார உற்பத்தியைப் பெருக்க உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், அ.தி.மு.க. சார்பில், தமிழகத்தில் உள்ள அனைத்து ஒன்றிய, நகரங்களிலும், மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலும் டிச‌ம்ப‌‌ர் 3ஆ‌மதேதி முதல் 7ஆ‌மதேதி வரை ஐந்து நாட்களில் ஏதாவது ஒரு நாளில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் எ‌ன்றஜெயல‌லிதகூ‌றியு‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil