Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இலவச வ‌ண்ண‌த் தொலை‌க்கா‌ட்‌சி பெ‌ட்டிக‌ள் தொட‌ர்‌ந்து வழ‌ங்க‌ப்படு‌ம்: கருணாநிதி உறு‌‌தி!

இலவச வ‌ண்ண‌த் தொலை‌க்கா‌ட்‌சி பெ‌ட்டிக‌ள் தொட‌ர்‌ந்து வழ‌ங்க‌ப்படு‌ம்: கருணாநிதி உறு‌‌தி!

Webdunia

, புதன், 28 நவம்பர் 2007 (10:17 IST)
"ஏழை, எளிய குடும்பங்களுக்கு இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் தொடர்ந்து வழங்கப்படும்'' எ‌ன்று முதலமைச்சர் கருணாநிதி கூறினார்.

த‌‌மிழக‌த்‌தி‌ல் உ‌ள்ள ஏழை-எளிய மக்களுக்கு இலவச வ‌ண்ண‌த் தொலை‌க்கா‌ட்‌சி பெட்டிகள், இணைப்புடன் கூடிய எரிவாயு அடுப்புகள் வழங்கும் திட்டம் தமிழ்நாடு முழுவதும் நேற்று நடைபெற்றது. சென்னையில், கலைவாணர் அரங்கில் நட‌ந்த விழாவில் முதலமைச்சர் கருணாநிதி, ஏழை-எ‌ளிய ம‌க்களு‌க்கு வ‌ண்ண‌த் தொலை‌க்கா‌ட்‌சி பெ‌‌ட்டி வழ‌ங்‌கி பேசுகை‌யி‌ல், இலவச வ‌ண்ண‌த் தொலை‌க்கா‌ட்‌சி பெ‌ட்டி, இலவச இணைப்புடன் கூடிய எரிவாயு அடுப்பு வழங்கும் திட்டத்தை நாங்கள் அறிவித்தபோது எவ்வளவோ பழிப்பு, இழிவுரை, இவர்களால் முடியுமா? ம‌க்களை ஏமாற்றுகிறார்கள் என்று யாரும் இந்த கூட்டணிக்கு வாக்களி‌த்து ஏமாறாதீர்கள் என்று சொன்னார்கள். ஆனால் இன்றைக்கு ஏமாந்தவர்கள் யார் என்று நாட்டுக்கு மிக நன்றாகத்தெரிகிறது.

நான் தொடக்கத்திலே ஒரு விழாவில் எடுத்துக்கூறியதைப்போல் திருமண வீட்டுக்கு எல்லோரையும் அழைத்து-ஆயிரம் பேர் திருமணத்துக்கு வந்திருந்தால் 500 பேரை முதல் பந்தியிலே உட்கார வைத்துவிட்டு இரண்டாவது பந்திக்கு மீதம் இருக்கிற 500 பேரை, நீங்கள் இரண்டாவது பந்தியிலே சாப்பிடலாம், கொஞ்சம் பொறுமையாக இருங்கள் என்று கேட்டுக்கொள்வதைப்போலத் தான், தொலைக்காட்சிப் பெட்டிகள் ஒரேயடியாக ஒரே நேரத்தில் தயாராக முடியாது.

இலவச வ‌ண்ண‌த் தொலை‌க்கா‌ட்‌சி பெ‌ட்டி வழ‌ங்குவ‌தி‌ல் எந்த தவறும் ஏற்படுவதற்கு இம்மியளவும் இடம் இல்லை. யாரும் தவறு செய்ய முடியாது. அந்த அளவுக்கு இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் இன்றைக்கு வழங்கப்பட்டு கொண்டிருக்கின்றன. இது தொடர்ந்து வழங்கப்படும். இரண்டாவது கட்டமாக முடிவு செய்யப்பட்ட 25 லட்சம் ஏழை எளிய குடும்பங்களுக்கு இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கும் திட்டம் விரைவில் நிறைவுறவுள்ளது.

மூன்றாவது கட்டமாக 750 கோடி ரூபாய் செலவில் மேலும் 34 லட்சத்து 25 ஆயிரம் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் கொள்முதல் செய்வதற்காக சட்டமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் மேற்கொண்ட முடிவுகளின்படி அவையும் இப்போது கொள்முதல் செய்யப்படுகின்றன.

நாங்களும் உங்களை ஏமாற்றவில்லை. ஏமாற்ற மாட்டோம். என்றைக்கும் உங்களை ஏமாற்ற மாட்டோம். உங்களுக்காக என்றென்றும் நாங்கள் தொண்டு புரிவோம். அதற்கு அடையாளம் தான் சொன்னதைச் செய்வோம். செய்வதைச் சொல்வோம் என்ற எங்களுடைய அந்த வாக்குறுதியை நிறைவேற்றியிருக்கிறோம் என்று கூறி இந்த இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளையும், அடுப்புகளையும் வழங்குகின்ற நிகழ்ச்சியை நான் தொடங்கிவைக்கிறேன். இவைகளை பெற்று மகிழ்ச்சியுற்று இந்த அரசுக்கு தொடர்ந்து நீங்கள் உங்களுடைய ஆதரவை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் எ‌ன்று முத‌ல்வ‌ர் கருணா‌நி‌தி கூ‌றினா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil