தனது பெயரை தவறாக பயன்படுத்தி சிபாரிசுகள் செய்யப்படுவதாக முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி குற்றம்சாற்றியுள்ளார்.
இது தொடர்பாக மு.க.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், சமீப காலமாக அரசு அலுவலகங்கள், பொது இடங்களிலும் எனது பெயரை பயன்படுத்தி களங்கம் ஏற்படுத்தக்கூடிய வகையிலும் தவறான பரிந்துரைகளையும் சிலர் செய்து வருவதாக தெரிய வருகிறது.
இனிமேல் என் சார்பாகவோ அல்லது என் பெயரைச் சொல்லி சிபாரிசுகள் வந்தாலும் யாராக இருந்தாலும் பொருட்படுத்த வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். முதல்வர் கருணாநிதியின் நல்லாட்சியில் பல முன்னேற்ற திட்டங்களை நிறைவேற்றிடவும், மக்கள் பணிக்கும், கட்சித் தொண்டர்களுக்கும் துணையாக நின்று உதவி செய்திட வேண்டும் என்கிற போது நானே நேரில் தொடர்பு கொள்வேன் என தெரிவித்துக் கொள்கிறேன் என்று மு.க.அழகிரி கூறியுள்ளார்.