மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை காயமின்றி உயிர் தப்பியது. இந்த அதிசய சம்பவம் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் நடந்தது.
சென்னையை சேர்ந்த பொறியாளர் மோகன் குமார், உறவினர் திருமணத்துக்காக குடும்பத்துடன் கோபிசெட்டிபாளையம் வந்தார். பெருமாள் கோயில் வீதியில் உள்ள விடுதியில் தங்கினார்.
இவரது ஒன்றரை வயது பெண் குழந்தை அழுதுகொண்டே இருந்ததனால் அவரது மனைவி விடுதியின் மூன்றாவது மாடியில் வைத்து விளையாட்டு காட்டிக் கொண்டு இருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக குழந்தை தவறி கீழே விழுந்தது.
அந்த வேளையில் கீழே மிகச்சரியாக ஒரு பெண் சென்று கொண்டு இருந்தார்.பெண்ணின் மீது குழந்தை விழுந்தது.
பெற்றோர் பதறியடித்துக் கொண்டு கீழே வந்தனர். குழந்தைக்கு லேசான காயம் மட்டும் ஏற்பட்டது. மூன்றாவது மாடியில் இருந்த விழுந்த குழந்தைக்கு அடி ஏதும்படாமல் உயிர் பிழைத்தது இறைவன் செயல் என அனைவரும் வியந்தனர்.