காஞ்சி வரதராஜபெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கு விசாரணையை வரும் ஜனவரி மாதம் 4ஆம் தேதிக்கு புதுச்சேரி நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.
காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கு புதுச்சேரி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்பட 24 பேர் மீது குற்றம் சாற்றப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணராஜா முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. குற்றம் சாட்டப்பட்ட 24 பேரில் பத்து பேர் மட்டுமே ஆஜரானார்கள். குற்றம்சாட்டப்பட்டுள்ள ஸ்ரீஜெயேந்திரர், விஜயேந்திரர் ஆகியோர் இன்று ஆஜராகவில்லை. இதையடுத்து வழக்கு விசாரணை ஜனவரி மாதம் 4ஆம் தேதிக்கு தள்ளி வைப்பதாக நீதிபதி கிருஷ்ணராஜா கூறினார்.
இதனிடையே இந்த வழக்கில் தமிழக அரசு வழக்கறிஞர்கள் ஆஜராக எதிர்ப்பு தெரிவித்து ஜெயேந்திரர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள சிறப்பு விடுமுறை கால மனு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.