Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மருத்துவ மாணவர்கள் கோரிக்கை: பிரதமருக்கு வைகோ கடிதம்!

மருத்துவ மாணவர்கள் கோரிக்கை: பிரதமருக்கு வைகோ கடிதம்!

Webdunia

, சனி, 24 நவம்பர் 2007 (10:36 IST)
மருத்துவ மாணவர்களின் கோரிக்கையை வலியுறுத்தி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, வைகோ கடிதம் எழுதியுள்ளார்.

மருத்துபடிப்பு காலத்தை ஆறரை ஆண்டுகளாக நீட்டிப்பதை கண்டித்து மருத்துவ மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களது கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து பிரதமர் மன்மோகன்சிங்குக்கு, ம.தி.மு.க. பொதுசெயலாளர் வைகோ எழு‌தியு‌ள்ள கடித‌த்‌தி‌ல், தமிழ்நாட்டிலும், நாட்டின் பல பகுதிகளிலும் மருத்துவ மாணவர்கள் தங்களது நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மரு‌த்துவ‌ம் (எம்.பி.பி.எஸ்.) படிக்கும் மாணவர்கள் ஓராண்டு கட்டாய கிராமப்புற சேவையில் ஈடுபட்டால்தான், அவர்களுக்கு பட்டம் வழங்கப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமை‌ச்ச‌ர் மரு‌த்துவ‌ர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார். இதை எதிர்த்து கடந்த 20ஆ‌ம் தேதியில் இருந்து மருத்துவ மாணவர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மத்திய அமை‌ச்ச‌ர் மரு‌‌த்துவ‌ர் அன்புமணியின் முடிவால், மருத்துவம் படிக்கும் மாணவர்கள் கடுமையாக பாதிப்புக்கு ஆளாவார்கள். இந்த திட்டத்தின் காரணமாக மருத்துவம் படிக்கும் மாணவர்கள் பட்டம் பெறுவதற்கு குறைந்தது ஆறரை ஆண்டுகளாகும். ஏழ்மையான குடும்பங்களை சேர்ந்த, கிராமப்புறங்களில் இருந்து ஏராளமான மாணவர்கள் மருத்துவம் படிக்கிறார்கள். அவர்களுடைய படிப்பு செலவுக்காக பூர்வீக சொத்துக்களை விற்றும், கடன் வாங்கியும் படிக்க வைத்து வருகிறார்கள். மருத்துவம் படிக்கும் மாணவர்களில் பெரும்பாலானோர் குறிப்பிட்ட நா‌ன்கரை வருடங்களில் தேர்வுகளை முடித்து பயிற்சி மரு‌‌த்துவ‌ர்களாக ஒரு வருட பயிற்சியை முடிக்க முடிவதில்லை.

மருத்துவ பட்டம் பெற ஓராண்டு கட்டாய கிராமப்புற சேவைத்திட்டம் சேர்க்கப்பட்டால், மாணவர்கள் குறிப்பாக மாணவியர் பாதிக்கப்படுவார்கள். தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்கள் கட்டாய கிராமப்புற சேவைத்திட்டத்தை எதிர்க்கவில்லை. கட்டாய கிராமப்புற சேவை திட்டத்தை ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட சாம்பசிவராவ் தலைமையிலான உயர்மட்டக்குழு தனது அறிக்கையை இன்னும் தாக்கல் செய்யவில்லை. ஆனால் அதற்கு முன்னதாகவே, மத்திய அமை‌ச்ச‌ர் மரு‌த்துவர் அன்புமணி ராமதாஸ் இந்த திட்டம் அடுத்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறியிருக்கிறார்.

ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகளில் ஏராளமான மரு‌த்துவ‌ர் காலிப்பணியிடங்கள் உள்ளன. கட்டாய கிராமப்புற சேவை திட்டம் அமல்படுத்தப்பட்டால், இந்த காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு பறிக்கப்பட்டு விடும். அடுத்த 10 ஆண்டுகளில் 40 ஆயிரம் இளநிலை மருத்துவர்கள் அரசு வேலைவாய்ப்புகளை இழப்பார்கள்.

அதிக மக்கள் தொகை கொண்ட நம்முடைய நாட்டில் ஏராளமான மரு‌‌‌த்துவ‌ர்க‌ள் தேவைப்படும் சூழ்நிலையில், மருத்துவ படிப்பு காலத்தை நீட்டிப்பது அந்த துறையில் மாணவர்கள் சேர்க்கையை குறைத்து விடும். இதனால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும்.

ஆகவே, தங்களுடைய நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்ய வேண்டியது அவசியமாகும். இந்த விஷயத்தில் தாங்கள் மரு‌த்துவ‌ப் படிப்பை ஐந்தரை ஆண்டுகளாக நீட்டிக்க உடனடியாக நடவடிக்கை எடுப்பதன் மூலமாக எதிர்காலத்தில் மருத்துவ மாணவர்கள் பாதுகாக்கப்படுவார்கள் எ‌ன்று வைகோ கே‌ட்டு‌க் கொ‌ண்டு‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil