Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

10‌ம் வகு‌ப்பு, மெட்ரிகுலேசன் தனித்தேர்வு முடிவு 19ஆ‌ம் தேதி வெளியீடு!

Advertiesment
10‌ம் வகு‌ப்பு, மெட்ரிகுலேசன் தனித்தேர்வு முடிவு 19ஆ‌ம் தேதி வெளியீடு!

Webdunia

, சனி, 17 நவம்பர் 2007 (17:38 IST)
அக்டோபர் மாதம் நடைபெற்ற 10‌‌ம் வகு‌ப்பு, மெட்ரிகுலேன், ஆங்கிலோ- இந்தியன், ஓ.எஸ்.எல்.சி. ஆ‌கிய த‌னி‌த்தேர்வு முடிவு வரு‌ம் 19ஆ‌ம் தேதி வெளியிடப்படுகிறது எ‌ன்று அரசு தே‌ர்வு இய‌‌‌க்குன‌ர் வச‌ந்‌தி ‌ஜீவான‌ந்த‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல், தனித்தேர்வர்களுக்கு கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற 10‌ம் வகு‌ப்பு, மெட்ரிகுலேசன், ஓ.எஸ்.எல்.சி., ஆங்கிலோ இந்தியன் ஆகிய தேர்வுகளின் முடிவு 19ஆ‌ம் தேதி வெளியிடப்படுகிறது. அதாவது 19ஆ‌ம் தேதி முதல் 21‌ஆ‌ம் தேதி வரை தனித்தேர்வர்கள் தேர்வு எழுதிய மையங்களில் மதிப்பெண்கள் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம்.

மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப படிவங்கள் அரசு தேர்வு இயக்குனர் அலுவலகத்திலும், அனைத்து அரசு தேர்வு மண்டல துணைஇயக்குனர் அலுவலகத்திலும், அனைத்து முதன்மை கல்விஅதிகாரி அலுவலகங்களிலும், மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகங்களிலும் பெற்றுக்கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபடிவங்களை அந்தந்த மண்டல துணை இயக்குனர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்க 23ஆ‌ம் தேதி கடைசி நாள். இரு தாள்கள் கொண்ட மொழிப்பாடம், ஆங்கிலப்பாடத்திற்கு ரூ.305, ஒரு தாள் கொண்ட பிற பாடங்களுக்கு ரூ.205. இந்த கட்டணத்தை அரசு தேர்வு இயக்குனரகம், சென்னை-6 என்ற பெயரில் வரவோலை (டிமாண்ட் டிராப்ட்) எடுத்து விண்ணப்பத்துடன் இணைக்கவேண்டும் எ‌ன்று அரசு தேர்வு இயக்குனர் வசந்தி ஜீவானந்தம் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil