''பத்திரிகைகளை பதிவு செய்வதற்கான சான்றிதழ் வழங்கும் அதிகாரம் வட்டார பத்திரிகை பதிவாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும்'' என்று பா.ஜ.க. மாநில தலைவர் இல.கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பத்திரிகைகளை பதிவு செய்வதில் உள்ள நடைமுறை பிரச்சனைகள் நமது கவனத்துக்கு வந்துள்ளன. தமிழ் பத்திரிகைகளின் தலைப்புகளும், பதிவுச் சான்றிதழ்களும் வழங்கும் அதிகாரம் வட்டாரப் பத்திரிகை பதிவாளர் அலுவலகங்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
பத்திரிகை தொடர்பான நீதிமன்ற உத்தரவுகள் அனைத்தும் இந்திய பத்திரிகை பதிவாளர் அலுவலகத்தின் இணைய தளத்தில் வெளியிட வேண்டும்.
பத்திரிகையாளர்களைக் கொண்ட ஒரு ஆலோசனைக் குழு நியமிக்கப்பட்டு பிராந்திய பத்திரிகை பதிவாளர் அலுவலக நடவடிக்கையை மேற்பார்வையிட்டு ஆலோசனை வழங்க அதிகாரம் வழங்கப்பட வேண்டும் இல.கணேசன் தமிழக அரசுக்க கோரிக்கை விடுத்துள்ளார்.