Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அனை‌த்து தொகுதிகளிலும் ஜனவ‌ரி 11‌‌ல் புகைப்பட வாக்காளர் இறுதிப் பட்டியல் வெ‌‌ளிய‌ீடு : நரேஷ்குப்தா!

Advertiesment
அனை‌த்து தொகுதிகளிலும் ஜனவ‌ரி 11‌‌ல் புகைப்பட வாக்காளர் இறுதிப் பட்டியல் வெ‌‌ளிய‌ீடு : நரேஷ்குப்தா!

Webdunia

, வெள்ளி, 16 நவம்பர் 2007 (10:44 IST)
''தமிழகத்தி‌உ‌ள்ள 234 ச‌ட்டம‌ன்தொகுதிகளிலும் புகைப்படத்துடன் கூடிய இறுதி வாக்காளர் பட்டியல் அடு‌த்ஆ‌ண்டஜனவரி 11ஆ‌மதேதி வெளியிடப்படும்'' என்று தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா கூ‌றினா‌ர்.

இது குறித்து சென்னை தலைமை‌சசெயலக‌த்த‌ி‌லசெ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌மநரேஷ்குப்தா கூறுகை‌யி‌ல், புகைப்படங்கள் பெறுவதில் சற்று பின்தங்கி இருக்கும் ராயபுரம் தொகுதியில் ஜனவரி 3ஆ‌மதேதி வரைவுப் பட்டியல் வெளியிடப்படும். பெயர் சேர்ப்பது அல்லது ஆட்சேபணதொடர்பாக டிசம்பர் 18ஆ‌மதேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

புகைப்படத்துடன் கூடிய இறுதி வாக்காளர் பட்டியல், தமிழகத்தில் உள்ள அனைத்து 234 சட்டமன்ற தொகுதிகளிலும் வரும் ஜனவரி 11ஆ‌மதேதி வெளியிடப்படும். தமிழகத்தில் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி 96.49 ‌விழு‌க்காடமுடிந்துள்ளது.

தமிழகத்தில் புகைப்பட அடையாள அட்டை வழங்கும் பணி 90 ‌விழு‌க்காடமுடிந்து விட்டது. இன்னும் 11 லட்சத்து 57 ஆயிரத்து 580 அட்டைகள் அச்சடிக்கப்பட உள்ளன. 7 லட்சத்து 78 ஆயிரம் அட்டைகள் அச்சடிக்கப்பட்டு, வழங்குவதற்கு தயாராக உள்ளன. தேர்தல் குறித்த விழிப்புணர்வை இளைஞர்களிடம் உருவாக்குவதற்காக எம்.ஓ.பி.வைஷ்ணவ் பெண்கள் கல்லூரியில் மாணவிகளைக் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil