பத்தாம் வகுப்பு தமிழ்ப்பாட நூலில் இருந்து நீக்கப்பட்ட பகுதிகளை மீண்டும் சேர்க்க அரசு உத்தர விட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாணவர்களின் பாடச்சுமையைக் குறைப்பதற்காக தமிழக கல்வித் திட்டத்தின்கீழ் பத்தாம் வகுப்பு தமிழ்ப் பாட நூலிருந்து பொதுத் தேர்வுக்காக சில பகுதிகளை நீக்கம் செய்து ஆணை வெளியிடப்பட்டது.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் அவ்வாறு நீக்கப்பட்ட பகுதிகளை மீண்டும் தமிழ்ப்பாடத்தில் சேர்க்கு மாறும், இது குறித்து வெளியிடப்பட்ட அரசாணையை மறுபரிசீலனை செய்யுமாறும் தமிழக முதலமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்தனர்.
அவர்களது கோரிக்கையை உடனடியாக பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் பள்ளிக் கல்வி அமைச்சருக்கு ஆணையிட்டார். அதன்படி கோரிக்கையை அரசு நன்கு ஆய்வு செய்து பத்தாம் வகுப்பு தமிழ்ப்பாட நூல் இருந்து நீக்கப்பட்ட பகுதிகளை மீண்டும் சேர்க்க அரசு முடிவெடுத்து அதற்கான அரசாணை வெளியிடப்படுகிறது என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.