அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் பொள்ளாச்சி ஜெயராமன், செ.மா.வேலுச்சாமி, எஸ்.பி.வேலுமணி ஆகியோரை கைது செய்ய சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
கோவை மாவட்ட அரசு விருந்தினர் மாளிகை காவலாளியாக இருப்பவர் சுப்பிரமணி. இவர் தன்னை ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன், செ.மா.வேலுச்சாமி, எஸ்.பி.வேலுமணி ஆகியோர் மீது அவினாசிபாளையம் காவல்நிலையத்தில் புகார் செய்தார்.
இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன் பிணை விடுதலை கோரி, பொள்ளாச்சி ஜெயராமன், செ.மா.வேலுச்சாமி, எஸ்.பி.வேலுமணி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.சுதந்தரம், நவம்பர் 23ஆம் தேதி வரை அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களை கைது செய்யக் கூடாது என்று காவல்துறைக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வரும் 23ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.