ஈரோடு அருகே விசைத்தறி தொழிலாளர்கள் போனஸ் மற்றும் கூலி உயர்வு கேட்டு உண்ணாவிரதம் இருந்தனர்.
ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் விசைத்தறி தொழில் அதிகளவில் நடந்து வருகிறது. இப்பகுதியில் உற்பத்தியாகும் பெட்சீட் மற்றும் கம்பளி வகைகள் வெளிநாடுகளின் பிரசித்தி பெற்றது என்பது குறிப்பிடதக்கது. சென்னிமலை விசைத்தறி நெசவாளர்கள் 20 சதவீதம் கூலி உயர்வு, 25 சதவீதம் போனஸ் வழங்க கோரி 12 நாட்களாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காங்கயம் எம்.எல்.ஏ., விடியல்சேகர், ஈரோடு கோட்டாச்சியர் குமரவேல் பாண்டியன் ஆகியோர் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தை நடந்தது. இதில் முதலாளிகள் சங்கத்தினர் 7.5 சதவீதம் கூலி உயர்வு, 8.15 சதவீதம் போனஸ் வழங்குவதாக ஒப்புக்கொண்டனர். ஆளும் கட்சி தொழிற்சங்கமான தொ.மு.ச., பேரவை, காங்கிரஸ் தொழிற்சங்கமான ஐ.என்.டி.யு.சி., யின் எம்.எல்.ஏ., ஆதரவு பிரிவினர் இதை ஏற்றனர். இதனையடுத்து இந்த பிரிவினர் பணிக்கு திரும்பினார்கள்.
ஆனால் சென்னிமலையில் நேற்று காலை முதல் மாலை வரை பஸ் ஸ்டாண்டு அருகே அண்ணா தொழிற்சங்கம், மறுமலர்ச்சி தொழிற்சங்கம், பாரதியஜனதா தொழிற்சங்கம், தே.மு.தி.க., தொழிற்சங்கம், ஐ.என்.டி.யு.சி., தொழிற்சங்கத்தின் ஒரு பிரிவு, ஏ.ஐ.டி.யு.சி.,தொழிற்சங்கம் ஆகியவற்றுடன், இது வரை தனியாக போராடி வந்த புரட்சிகர தொழிலாளர் முன்னணியும் இணைந்து உண்ணாவிரதத்தில் ஈடுபடுபட்டனர்.
தறிகுடோன்களுக்கு கோட்டாச்சியர் உத்திரவின்பேரில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.