Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஓய்வு பெற்றவர்களை வைத்து அரசு துறை களையெடுக்கப்படும்: ஈரோடு ஆ‌ட்‌சிய‌ர்

-ஈரோடு செ‌ய்‌தியாள‌ர்

Advertiesment
ஓய்வு பெற்றவர்களை வைத்து அரசு துறை களையெடுக்கப்படும்: ஈரோடு ஆ‌ட்‌சிய‌ர்

Webdunia

, திங்கள், 12 நவம்பர் 2007 (11:17 IST)
ஓய்வு பெற்றவர்களை வைத்து அரசு துறை களையெடுக்கப்படும் என ஓய்வு பெற்ற அலுவலர் சங்க புதிய கட்டிட திறப்பு விழாவில் ஆட‌்‌‌சிய‌ர்
உதயசந்திரன் பேசினார்.

ஈரோடு மாவட்ட ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க புதிய கட்டிட திறப்பு விழா ஈரோட்டில் நடந்தது.

ஆட‌்‌‌சிய‌ர் உதயசந்திரன் புதிய கட்டிடத்தை திறந்து வைத்து பேசுகை‌யி‌ல், அரசு ஊழியர்கள் தாங்கள் ஓய்வுபெற்ற பின் அவர்கள் வாழ்க்கை சீராக செல்ல அரசு ஓ‌ய்வூ‌திய‌ம் வழங்குவது அரசின் கடமை. நிர்வாகம் சிறப்பாக செயல்பட நீங்கள் தான் காரணம். இதற்கு உங்களது உழைப்பு தான் காரணம்.

ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகளை வைத்து களையெடுக்கும் பணியில் இறங்கியுள்ளோம். ஒரு மாதமாக கல்வித்துறையில் களையெடுக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்ற பின், கண்காணிப்பு அமைப்பாக செயல்பட வேண்டும்.

தொலை நோக்குபார்வையில் ஒவ்வொரு துறையிலும் கண்காணிப்பாளர் இருக்க வேண்டும். இது போன்று செயல்பட்டால் களையெடுக்க எளியதாக இருக்கும் எ‌ன்று அவர் பேசினார்.

பின்னர் வேலப்ப வீதியில் உள்ள ஆசிர நகர வைசிய திருமண மண்டபத்தில் 28வது ஆண்டு நிறைவு விழா பொதுக்குழு கூட்டம் நடந்தது. குடும்ப பாதுகாப்பு திட்டத்தின் கீழ் தற்போது ரூ. 25 ஆயிரம் வழங்குவதை ரூ. 50 ஆயிரமாக உயர்த்தி தர வேண்டும். ஓ‌ய்வூ‌தியதார‌ர்களு‌க்கு‌ம் உச்சவரம்பை ரூ. 50 ஆயிரத்திலிருந்து ரூ.ஒரு லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும்.

ஓய்வூதியர்களுக்கு மருத்துவப்படி ரூ.100 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். அரசு பென்ஷனர்களுக்கு விழாக்கால கருணைத் தொகையை ரூ. 150லிருந்து ரூ.500 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உட்பட பல தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

Share this Story:

Follow Webdunia tamil