துபாயில் இறந்த தமிழர்களுக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் : தமிழக அரசு அறிவிப்பு!
துபாயில் பாலம் இடிந்த விபத்தில் சிக்கிப் பலியான தமிழர்கள் 5 பேரின் குடுபங்களுக்கும் தலா ரூ.2 லட்சம் நிவாரண உதவியாக வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
துபாயில் ஜுமிரியா மதினாமால் பகுதியில் உள்ள சுபோக் சாலையில் பெரிய பாலம் கட்டப்பட்டு வருகிறது. இதில் இந்தியர்கள் ஏராளமானோர் பணிபுரிந்து வருகின்றனர்.
தீபாவளி அன்று பணி நடந்துகொண்டிருந்தபோது பாலத்தின் ஒருபகுதி இடிந்து விழுந்தது. அப்போது கான்கிரீட் இடிபாடுகளுக்குள் சிக்கி இந்தியர்கள் 7 பேர் பலியானார்கள். இவர்களில் 5 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள்.
இந்நிலையில், சாஜஹான் சம்சுதீன், மோகன் லட்சுமணன், கோவிந்தம், மதியழகன், தங்கம் ஆகிய இந்த 5 பேரின் குடும்பங்களுக்கும் தலா ரூ.2 லட்சம் வீதம் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.