Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜெயல‌லிதாவு‌க்கு குண்டு துளைக்காத அம்பாசிடர் கார்: த‌மிழக அரசு வழ‌ங்‌கியது!

ஜெயல‌லிதாவு‌க்கு குண்டு துளைக்காத அம்பாசிடர் கார்: த‌மிழக அரசு வழ‌ங்‌கியது!

Webdunia

, செவ்வாய், 6 நவம்பர் 2007 (10:28 IST)
''மு‌ன்னா‌ள் முதலமை‌ச்ச‌ர் ஜெயல‌லிதாவு‌க்கு குண்டு துளைக்காத அம்பாசிடர் கார் வழங்கப்பட்டுவிட்டது'' என்று தமிழக அரசு, உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் தெரிவித்துள்ளது.

முன்னாள் முதலமைச்சரான என‌க்கு பல வ‌‌ழிக‌ளி‌ல் அ‌ச்சுறு‌‌த்த‌ல் இருப்பதால் தனக்கு முழு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று சென்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌‌த்‌தி‌ல் வழக்கு தொடர்ந்தார். ஜெயலலிதாவுக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும், குண்டு துளைக்காத அம்பாசிடர் காரை தமிழக அரசு கொடுக்க முன்வந்தும், அதை பெற ஜெயலலிதா மறுத்துவிட்டார் என்றும், அரசு பதில் மனுவை தாக்கல் செய்தது.

ஆனால் தமிழக அரசு கூறிய பதிலை, ஜெயலலிதா மறுத்து மனு ஒன்று தாக்கல் செய்தார். குண்டு துளைக்காத அம்பாசிடர் கார் கொடுத்தால் அதை வாங்க தயாராக இருக்கிறேன் என்று மனுவில் ஜெயலலிதா கூறியிருந்தார்.

ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவிற்கு பதில் மனுவை உள்துறை செயலாளர் மாலதி நேற்று உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌‌த்‌தி‌ல் தாக்கல் செய்த மனு‌வி‌ல், ஜெயலலிதாவுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவது பற்றி தமிழக அரசு ஏற்கனவே கூறியது அனைத்தும் உண்மைதான். இவருக்கு `இசட் பிளஸ்' பாதுகாப்பு உரிய முறையில் வழங்கப்படுகிறது. 24 மணி நேரமும் இவருக்கு பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இவரது வீட்டில் ஒருவர் அத்துமீறி நுழைந்ததாக கூறப்பட்ட சம்பவம் குறித்து காவ‌ல்துறை‌யின‌ர் உ‌ரிய விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த நபரின் சொந்த ஊருக்கு சென்றும் விசாரணை செய்தனர்.

இந்த விஷயத்தில் எந்த விதமான கட்டுகதையும் கூற அரசுக்கு அவசியமில்லை. அவரது வீட்டில் இருந்த பாதுகாப்பு காவ‌ல்துறை‌யின‌ர் கடமையிலிருந்து தவறியிருந்தால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். குண்டு துளைக்காத அம்பாசிடர் காரை ஜெயலலிதாவுக்கு கடந்த 3ஆ‌ம் தேதி ஒப்படைத்துவிட்டோம். அவரது மெய்காப்பாளர் குப்புரா‌ஜ் இந்த காரை பெற்றுக்கொண்டுள்ளார். தேவையில்லாமல் ஜெயலலிதா தொடர்ந்த இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் எ‌ன்று அரசு தனது பதில் மனுவில் கூறியுள்ளது.

இந்த வழக்கு இன்று (6ஆ‌‌ம் தே‌தி) விசாரணைக்கு வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil