சத்தியமங்கலம் வனப்பகுதியில் பச்சோந்தியின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதை யாரும் தொந்தரவு செய்யவேண்டாம் என வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் காட்டுயானை, காட்டெருமை, சிறுத்தை, புலி, செந்நாய், மான் உள்ளிட்ட பெரிய விலங்குகள் வாழ்ந்து வந்தாலும் கீரி, முயல், எரும்புதிண்ணி, பச்சோந்தி போன்ற சிறிய மிருகங்களும் வாழ்ந்து வருகிறது. இதில் தற்போது பச்சோந்திகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
காட்டுயானை, புலி போன்ற செட்யூல்டு 1 வனவிலங்குகளில் பச்சோந்தியும் உள்ளது. ஆகவே பச்சோந்தியை கொள்பவர்களுக்கு காட்டுயானையை கொன்றால் என்ன தண்டனை கிடைக்குமோ அந்த தண்டனை உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி முக்கிய விலங்காக கருதப்படும் பச்சோந்தி தற்போது சத்தியமங்கலம் பகுதியில் அதிகரித்துள்ளது. சாதாரணமாக ரோட்டை கடந்து செல்கிறது. பச்சோந்தி இடத்திற்கு தகுந்தாற்போல் நிறம் மாறும் தன்மையும் மற்றும் மெதுவாக நகரும் சுபாவம் கொண்டது இதனால் வாகனங்களில் நசுங்க வாய்ப்புள்ளது.
ஆகவே வாகன ஓட்டுனர்கள் ரோட்டை கடக்கும் பச்சோந்தி போன்ற சிறிய விலங்குகள் கடக்கும்போது கவனமாக ஒதுங்கி செல்லவேண்டும் என்று சத்தியமங்கலம் மாவட்ட வன அதிகாரி இராமசுப்பிரமணியம் மற்றும் ரேஞ்சர்கள் சுந்தரராஜன், மோகன், சிவமல்லு ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.