வங்க கடலில் தற்போது குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதனால் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும் என்ற சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் கூறுகையில், தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்க கடலில் இலங்கைக்கு அப்பால் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதனால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும். ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும்,
தற்போது வடகிழக்கு பருவமழை காலம் என்பதால் மாநிலத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அருப்புக்கோட்டையில் 70 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது என்று கூறினார்.
நேற்று இரவில் இருந்தே சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
இன்று காலையில் தான் மழை நின்றது. தற்போது வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது.