பொதுநிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற முதலமைச்சர் கருணாநிதிக்கு திடீரென்று மூட்டுவலி ஏற்பட்டதால் சக்கர நாற்காலியில் அழைத்துச் செல்லப்பட்டார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற தொலைத் தொடர்பு மருத்துவ வசதி பற்றிய நிகழ்ச்சியில் முதலமைச்சர் கருணாநிதி கலந்து கொண்டார். நிகழ்ச்சி முடிந்த பிறகு அவருடைய கார் வரை சக்கர நாற்காலியில் அழைத்துச் செல்லப்பட்டார்.
கடந்த சில நாட்களாக வெளியூர் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட முதலமைச்சர் கருணாநிதிக்கு திடீரென்று மூட்டு வலி ஏற்பட்டது என்று அவருடைய உதவியாளர்கள் தெரிவித்தனர்.